ADDED : ஜூலை 26, 2011 11:19 PM
நெய்வேலி : நெய்வேலியில் சாரை பாம்புகள் இணைந்து உல்லாச நடனமாடியதை மக்கள் ஆச்சரியமாக வேடிக்கை பார்த்தனர்.
நெய்வேலி நகர சாலைகளில் பாம்புகள் உலா வருவது சர்வ சாதாரணமாகி விட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை டவுன்ஷிப் பிளாக் 6ல் உள்ள ரேகா மளிகை கடை எதிரே 7அடி நீளமுள்ள சாரை பாம்புகள் இரண்டு ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து மூன்றடி உயரத்திற்கு எழும்பி நடனமாடின. இதனை அப்பகுதி மக்கள், ஆச்சரியமாக நின்று வேடிக்கை பார்த்தனர்.