/உள்ளூர் செய்திகள்/கடலூர்/தமிழ்நாடு விவசாய சங்க வட்ட குழுக் கூட்டம்தமிழ்நாடு விவசாய சங்க வட்ட குழுக் கூட்டம்
தமிழ்நாடு விவசாய சங்க வட்ட குழுக் கூட்டம்
தமிழ்நாடு விவசாய சங்க வட்ட குழுக் கூட்டம்
தமிழ்நாடு விவசாய சங்க வட்ட குழுக் கூட்டம்
ADDED : ஜூலை 26, 2011 10:18 PM
திட்டக்குடி : திட்டக்குடியில் தமிழ்நாடு விவசாய சங்க வட்ட குழுக் கூட்டம் நடந்தது.
வட்ட துணைச் செயலர் நாராயணசாமி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ரங்கசாமி, இந்திய கம்யூ., மங் களூர் ஒன்றிய செயலர் முருகையன், நல்லூர் ஒன்றிய செயலர் மகாலிங்கம், வட்ட செயலர் ராதாகிருஷ்ணன், தலைவர் ராமசாமி, பொருளா ளர் லட்சுமணன், துணைத் தலைவர் ராமானுஜம், மாவட்டக்குழு சபாபதி, பரமசிவம், வட்டக்குழு ராமமூர்த்தி பங்கேற்றனர்.
கூட்டத்தில், பெண்ணாடம் அம்பிகா சர்க்கரை ஆலையில் கரும்புவெட்டுக் கூலி, வண்டி வாடகையை ஆலை நிர்வாகமே ஏற்க வேண்டும். கரும்பு வெட்டி மூன்று மாதத்திற்கு மேலாகியும் தரப்படாமல் உள்ள கரும்பு பணத்தை உடனடியாக வழங்க வேண்டும். வெட்டிய கரும்புகளை ஏற்றுவதற்கு வண்டியை ஆலை நிர்வாகமே ஏற்பாடு செய்ய வேண்டும் உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 8ம் தேதி அம்பிகா சர்க்கரை ஆலை முன்பு உண்ணாவிரதம் மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.