/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/கோவில்பட்டி கோயிலில் ஆடித்தபசு திருவிழா11ம் தேதி ஆடித்தபசுகோவில்பட்டி கோயிலில் ஆடித்தபசு திருவிழா11ம் தேதி ஆடித்தபசு
கோவில்பட்டி கோயிலில் ஆடித்தபசு திருவிழா11ம் தேதி ஆடித்தபசு
கோவில்பட்டி கோயிலில் ஆடித்தபசு திருவிழா11ம் தேதி ஆடித்தபசு
கோவில்பட்டி கோயிலில் ஆடித்தபசு திருவிழா11ம் தேதி ஆடித்தபசு
ADDED : ஜூலை 26, 2011 01:08 AM
கோவில்பட்டி : கோவில்பட்டி சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக் கோயிலில் ஆடித்தபசு திருவிழா கால்நடும் நிகழ்ச்சியுடன் துவங்கியது.
மேலும் இதன் முக்கிய நிகழ்ச்சியாக வரும் 11ம் தேதி அம்பாள் ஆடித்தபசு திருக்கோலக்காட்சி நடக்கிறது.கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோயிலில் 29ம் ஆண்டு ஆடித்தபசு திருவிழா கால்நாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. இதில் மஞ்சள், பால், கோமியம், பசும்பால் ஆகியவை ஊற்றி சிறப்பு தீபாராதனை நடந்தது. சிறப்பு பூஜைகளை சுப்பிரமணியய்யர் செய்திருந்தார். தொடர்ந்து வரும் நாட்களில் சுவாமி அம்பாளுக்கு காப்பு கட்டுதல், காளியம்மனுக்கு அக்னிசட்டி வளர்த்தல், காளியம்மன் மற்றும் கருப்பசாமிக்கு கொடை விழாவும், இரவில் கருப்பசாமி வேட்டைக்கு செல்லும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் 11ம் தேதி சங்கரேஸ்வரி அம்பாள் ஆடித்தபசு திருக்கோலக் காட்சியும், சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும் நடக்கிறது. மேலும் சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் திருவீதி உலா வருதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.திருவிழாவின் 11 நாட்கள் ஒவ்வொரு மண்டகப்படிதாரர் நிகழ்ச்சிகளும் நடக்கிறது. கால்நாட்டு விழாவில் கோயில் தலைவர் ராம்ராஜ், பொருளாளர் சுப்பிரமணி, செயலாளர் சுப்பையா, துணை செயலாளர் தனுஷ்கோடி, நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள், அர்ச்சகர் சுப்பிரமணியய்யர் ஆகியோர் செய்து வருகின்றனர்.


