/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/அனைத்திந்திய இளைஞர்பெருமன்ற கூட்டம்அனைத்திந்திய இளைஞர்பெருமன்ற கூட்டம்
அனைத்திந்திய இளைஞர்பெருமன்ற கூட்டம்
அனைத்திந்திய இளைஞர்பெருமன்ற கூட்டம்
அனைத்திந்திய இளைஞர்பெருமன்ற கூட்டம்
ADDED : ஜூலை 26, 2011 01:07 AM
தூத்துக்குடி : தூத்துக்குடியில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற கூட்டம் நடந்தது.இளைஞர்பெருமன்றத்தின் மாவட்டதலைவர் முத்துகுமார் தலைமை வகித்தார்.
மாவட்டச்செயலாளர் பாலமுருகன் மாநில குழு முடிவுகளை விளக்கிப்பேசினார். மருத்துவ படிப்பு சேர்க்கையின் போது பொது நுழைவுத் தேர்வினை அகில இந்திய அளவில் நடத்த திட்டமிட்டுள்ளது. தமிழக அரசு பின்பற்ற கூடிய மருத்துவ கல்விக்கான சேர்க்கை முறையை பின்பற்ற வேண்டும், பொது நுழைவுத்தேர்வு முறையை ரத்து செய்யவேண்டும், தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள சுகாதார சீர்கேடுகளை சரிசெய்யவேண்டும், போதிய அளவு டாக்டர்கள் நியமிக்கவேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட குழு உறுப்பினர்கள் ராஜாசிங், மயில்முருகன், கோவிந்தன், பாலதண்டாயுதம், மாவட்ட துணைத்தலைவர்கள் பெருமாள், பலவேசம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


