Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கன்னியாகுமரி/குழித்துறை வாவுபலி பொருட்காட்சி 5 நாட்களில் ரூ.1.25 லட்சம் வருவாய்

குழித்துறை வாவுபலி பொருட்காட்சி 5 நாட்களில் ரூ.1.25 லட்சம் வருவாய்

குழித்துறை வாவுபலி பொருட்காட்சி 5 நாட்களில் ரூ.1.25 லட்சம் வருவாய்

குழித்துறை வாவுபலி பொருட்காட்சி 5 நாட்களில் ரூ.1.25 லட்சம் வருவாய்

ADDED : ஜூலை 26, 2011 12:57 AM


Google News

மார்த்தாண்டம் : குழித்துறை வாவுபலி பொருட்காட்சியில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

ஐந்து நாட்களில் நுழைவு கட்டணமாக மட்டும் ஒரு லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் நகராட்சிக்கு கிடைத்துள்ளது.குழித்துறை நகராட்சி சார்பில் தாமிரபரணி ஆற்றின் கரையில் வாவுபலி பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 20ம் தேதி துவங்கிய 86வது வாவுபலி பொருட்காட்சியில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கடந்த ஞாயிற்று கிழமை மட்டும் நுழைவு கட்டணம் மூலம் நகராட்சிக்கு 78 ஆயிரத்து 618 ரூபாய் கிடைத்தது. இதுவரை நுழைவு கட்டண வருமானம் ஒரு லட்சத்து 24 ஆயிரத்தை தாண்டியது.கபடி போட்டிபொருட்காட்சி மைதானத்தில் மாணவ, மாணவியரை ஊக்குவிப்பதற்கு கபடி போட்டி நடத்தப்பட்டு வருகிறது.



நேற்று நடந்த போட்டியில் ஐரேனிபுரம் சி.எஸ்.ஐ., வி.வி., பள்ளி, மார்த்தாண்டம் எல்.எம்.எஸ்., பள்ளி, பள்ளியாடி எல்.எம்.எஸ்., பள்ளி அணிகள் மோதின. இன்று(26ம் தேதி) விளவங்கோடு அரசு மேல்நிலைப்பள்ளி, மார்த்தாண்டம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அணிகள் மோதுகின்றன.நாளை கல்லூரிகளுக்கு இடையிலான போட்டி துவங்குகிறது. முதல் நாள் லட்சுமிபுரம் கல்லூரி, அகஸ்தீஸ்வரம் விவேகானந்த கல்லூரி அணிகள் மோதுகின்றன. வரும் 4ம் தேதி முதல் பெண்கள் கபடி போட்டி துவங்குகிறது. முதல் போட்டியாக நாகர்கோவில் இந்து கல்லூரி, லட்சுமிபுரம் கல்லூரி அணிகள் மோதுகின்றன. 5ம் தேதி ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி, சுங்கான்கடை ஐயப்பா கல்லூரி அணிகள் மோதுகின்றன.இதற்கான ஏற்பாடுகளை குழித்துறை நகராட்சி நிர்வாகம் சார்பில் சுகாதார அதிகாரி நாகராஜன் தலைமையில் ஊழியர்கள் செய்துள்ளனர்.













      Our Apps Available On




      Dinamalar

      Follow us