/உள்ளூர் செய்திகள்/திருவண்ணாமலை/வேன் மீது லாரி மோதி விபத்து ஒரே குடும்பத்தில் 6 பேர் பலிவேன் மீது லாரி மோதி விபத்து ஒரே குடும்பத்தில் 6 பேர் பலி
வேன் மீது லாரி மோதி விபத்து ஒரே குடும்பத்தில் 6 பேர் பலி
வேன் மீது லாரி மோதி விபத்து ஒரே குடும்பத்தில் 6 பேர் பலி
வேன் மீது லாரி மோதி விபத்து ஒரே குடும்பத்தில் 6 பேர் பலி
ADDED : ஜூலை 26, 2011 12:20 AM
திருவண்ணாமலை: ஆரணி அருகே, ஆம்னி வேன் மீது லாரி மோதியதில், ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் பலியாகினர்.
ஆரணி பெரிய கடை தெருவை சேர்ந்தவர் நகை வியாபாரி ஆனந்தன் (32). இவரது மனைவி ரேணு (26). இவர்களது மகன் நரேந்திரன் (3), மகள் கோஷிகா (1), ஆனந்தனின் தாய் நாகவள்ளி (46), தங்கை சத்யா (26) ஆகிய ஆறு பேர், நேற்று முன்தினம் படவேடு ரேணுகாம்பாள் கோவிலுக்கு மாருதி ஆம்னி வேனில் சென்றனர். இரவு 8 மணி அளவில் வீடு திரும்பி கொண்டிருந்த போது, காரை ஆனந்தன் ஓட்டியுள்ளார். ஆரணி- திருவண்ணாமலை சாலை முள்ளிப்பட்டு அருகே வந்தபோது, எதிரே வந்த லாரி, வேன் மீது மோதியது. இதில், வேன் அப்பளம் போல் நொறுங்கி, சம்பவ இடத்திலேயே ஆனந்தன் பலியானார். ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ரேணு, நரேந்திரன், சத்யா ஆகிய மூவரும் பரிதாபமாக இறந்தனர். நாகவள்ளி, கோஷிகா ஆகிய இருவரும், சிகிச்சைக்காக வேலூர் கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் விபத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. ஆரணி டவுன் போலீஸார் விசாரித்து, போளூர் அடுத்த வம்பலூர் கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் தேவேந்திரனை தேடி வருகின்றனர்.