/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ராமநாதபுரம் வட்ட வழங்கல் அலுவலகத்தில் அலைக்கழிப்புராமநாதபுரம் வட்ட வழங்கல் அலுவலகத்தில் அலைக்கழிப்பு
ராமநாதபுரம் வட்ட வழங்கல் அலுவலகத்தில் அலைக்கழிப்பு
ராமநாதபுரம் வட்ட வழங்கல் அலுவலகத்தில் அலைக்கழிப்பு
ராமநாதபுரம் வட்ட வழங்கல் அலுவலகத்தில் அலைக்கழிப்பு
ADDED : ஜூலை 25, 2011 09:56 PM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் வட்ட வழங்கல், புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்கள், மாதக்கணக்கில் அலைய விடப்படுகின்றனர்.
ராமநாதபுரம் வட்ட வழங்கல் அலுவலகத்தில் புதிய கார்டு கேட்டு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவர்களுக்கு ஒப்புகை சீட்டு மட்டும் வழங்குகின்றனர். ஆனால் குறிப்பிட்ட காலத்தில் ரேஷன்கார்டு, வழங்கப்படுவதில்லை. இதனால் வெளியூரிலிருந்து வாரத்துக்கு ஒரு முறை தாலுகா அலுவலகத்துக்கு வந்து செல்கின்றனர்.
15 நாளில் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இருப்பினும் 15 மாதங்கள் ஆகியும் கிடைக்கவில்லை. கலெக்டர் அலுவலகத்தில் கார்டு அச்சடிப்பில் உள்ளது, என்று கூறுகின்றனர். ஆனால் யாருக்கும் கார்டு வந்தபாடில்லை. ஏற்கனவே தேர்தல், இணைப்புத்தாள் பற்றாக்குறை ஆகிய காரணங்களை கூறியவர்கள், தற்போது தாமதம் என்ற காரணம் கூறுகின்றனர். 500 விண்ணப்பங்கள் அனுப்பினால், இரண்டு மாதம் கழித்து 50 கார்டுகள் மட்டுமே தயாராகி வருகிறது. இதனால் புதிய ரேஷன் கார்டு என்பது கானல் நீராகத்தான் உள்ளது. மேலும் பட்டா மாறுதலுக்கு, வருபவர்களை மறித்து, பேரம் பேசும் புரோக்கர்கள், தொல்லையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.