/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/அஸ்திவாரத்தோடு நிற்கும் சுனாமி வீடுகள் : உதவித்தொகை இன்றி மீனவர்கள் அவதிஅஸ்திவாரத்தோடு நிற்கும் சுனாமி வீடுகள் : உதவித்தொகை இன்றி மீனவர்கள் அவதி
அஸ்திவாரத்தோடு நிற்கும் சுனாமி வீடுகள் : உதவித்தொகை இன்றி மீனவர்கள் அவதி
அஸ்திவாரத்தோடு நிற்கும் சுனாமி வீடுகள் : உதவித்தொகை இன்றி மீனவர்கள் அவதி
அஸ்திவாரத்தோடு நிற்கும் சுனாமி வீடுகள் : உதவித்தொகை இன்றி மீனவர்கள் அவதி
ராமநாதபுரம் : ஏர்வாடி அருகே அஸ்திவாரத்தோடு சுனாமி வீடுகளின் பணி நிறுத்தப்பட்டதால், வாடகை உதவித்தொகையும் கிடைக்காமல் மீனவர்கள் அவதிப்படுகின்றனர்.
இதே போல் பனைக்குளம் அருகே சோகையன் தோப்பில் 100க்கும் மேற்பட்ட சுனாமி வீடுகள் அஸ்திவாரத்தோடு பணி பாதியில் நிறுத்தப்பட்டது. சடைமுனியன் வலசையை சேர்ந்த ஆண்டி கூறியதாவது: கடந்த 11 மாதங்களாக எந்த பணியும் நடக்கவில்லை. காற்றால் தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வாடகை உதவித்தொகையும் வழங்காததால் மிகவும் சிரமப்படுகிறோம். விரைவில் வீட்டை கட்டித்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். ஊரக வளர்ச்சித்துறை இளநிலை பொறியாளர் சேகு கூறியதாவது: இந்த பணிகளை ஆந்திர நிறுவனம் கான்ட்ராக்ட் எடுத்துள்ளது. நாங்கள் வேலை முடிக்க கேட்டபோது, பணியாளர்கள் இல்லை, என்று கூறுகின்றனர். அடுத்த மாதத்திலிருந்து பணிகள் தொடங்க சொல்லி கூறியுள்ளோம், என்றார்.