Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/சுனாமி பாதிப்பு பகுதிகளை புனரமைப்பது குறித்த கருத்தரங்கு

சுனாமி பாதிப்பு பகுதிகளை புனரமைப்பது குறித்த கருத்தரங்கு

சுனாமி பாதிப்பு பகுதிகளை புனரமைப்பது குறித்த கருத்தரங்கு

சுனாமி பாதிப்பு பகுதிகளை புனரமைப்பது குறித்த கருத்தரங்கு

ADDED : ஜூலை 25, 2011 01:56 AM


Google News

சூலூர் : கருமத்தம்பட்டி, ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லூரியில், சுனாமி மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கைள் குறித்து ஒரு நாள் பயிலரங்கு நடந்தது.ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லூரியின் சிவில் இன்ஜினியரிங் துறை மற்றும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பும் (டி.ஆர்.டி.ஓ.,) இணைந்து, சுனாமி மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கைகள் குறித்த ஒரு நாள் பயிலரங்கை கல்லூரி வளாகத்தில் நடத்தின.

உதவி பேராசிரியை தீபாஸ்ரீ வரவேற்றார். கல்லூரி முதல்வர் மோகனசுந்தரம் முன்னிலை வகித்து பேசினார். அண்ணாமலை பல்கலைக்கழக அமைப்பியல் துறைத்தலைவர் ஆண்டனி ஜெயசேகர் பேசுகையில்,'' ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகள் துரிதமாக புனரமைக்கப்பட்டன.



நமது நாட்டில் சுனாமியில் பாதிக்கப்பட்ட பகுதிகள் இதுவரை முழுமையாக புனரமைக்கப்படவில்லை. ''பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கைகளை பயன்படுத்தி புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்,'' என்றார். புதுச்சேரி பொறியியல் கல்லூரி அமைப்பியல் துறைத்தலைவர் கோதண்டராமன் பேசுகையில்,'' சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களிலிருந்து கட்டுமானத்தை பாதுகாக்க வேண்டும். ''கட்டுமான சீர்குலைவை கட்டுப்படுத்தும் வகையில், சுனாமி பாதுகாப்பு கட்டடங்கள் கடலோரப்பகுதிகளில் கட்டப்பட வேண்டும்,'' என்றார். சிவில் இன்ஜினியரிங் துறைத்தலைவர் பத்மநாபன், பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பயிலரங்கில் பங்கேற்றனர். விரிவுரையாளர் வினோத்குமார் நன்றி தெரிவித்தார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us