/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பிடிபட்டது மண்ணுளி பாம்பு பார்க்க திரண்டனர் மக்கள்பிடிபட்டது மண்ணுளி பாம்பு பார்க்க திரண்டனர் மக்கள்
பிடிபட்டது மண்ணுளி பாம்பு பார்க்க திரண்டனர் மக்கள்
பிடிபட்டது மண்ணுளி பாம்பு பார்க்க திரண்டனர் மக்கள்
பிடிபட்டது மண்ணுளி பாம்பு பார்க்க திரண்டனர் மக்கள்
ADDED : ஜூலை 25, 2011 01:55 AM
அன்னூர் : தனியார் மில்லில் நுழைந்த மண்ணுளி பாம்பை வனத்துறையினர் பிடித்து சிறுமுகை காட்டில் விட்டனர்.அன்னூர் கோவை ரோட்டில் ராஜேந்திரன் என்பவரது ஸ்பின்னிங் மில்லில் நேற்று மதியம் மூன்று அடி நீளமுள்ள மண்ணுளி பாம்பு நுழைந்தது.
இதை பார்த்த தொழிலாளர்கள் அலறி அடித்து ஓடினர். பின்னர் இந்த பாம்புக்கு விஷதன்மையில்லை என்று தெரிய வந்தவுடன் ஒரு குச்சியில் எடுத்து ஒரு 'பிளாஸ்டிக் டிரம்மில்' போட்டனர். சிறுமுகை வனத்துறை ரேஞ்சர் தினேஷ்குமாருக்கு தகவல் தெரிவித்தனர். வனக்காவலர் லால், வேட்டை தடுப்பு காவலர் வெங்கடேஷ் ஆகியோர் வந்து அந்த பாம்பை மீட்டுச் சென்றனர்.
வனத்துறையினர் கூறுகையில்,'' மண்ணுளி பாம்புக்கு விசேஷ சக்தி உண்டு என்று கூறி சிலர் அதிக விலை கொடுத்து வாங்குகின்றனர். இந்த பாம்புக்கு எவ்வித விசேஷமும் இல்லை; விஷமும் இல்லை. ஆனால் இதன் நாக்கு நம் மீது பட்டால் உடலில் அரிப்புடன் வெள்ளைத் தழும்பும் ஏற்படும். இது பெரும்பாலும் மண்ணுக்குள் தான் இருக்கும். இந்த பாம்பை சிறுமுகை காட்டில் விட்டு விடுவோம்,'' என்றனர். இருபுறமும் தலையுடன் உள்ள பாம்பு பிடிபட்ட தகவலறிந்த அருகிலுள்ள மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்து சென்றனர்.