/உள்ளூர் செய்திகள்/திருச்சி/தண்ணீரில் மூழ்கிய என்.ஐ.டி., மாணவர் பலிதண்ணீரில் மூழ்கிய என்.ஐ.டி., மாணவர் பலி
தண்ணீரில் மூழ்கிய என்.ஐ.டி., மாணவர் பலி
தண்ணீரில் மூழ்கிய என்.ஐ.டி., மாணவர் பலி
தண்ணீரில் மூழ்கிய என்.ஐ.டி., மாணவர் பலி
ADDED : ஜூலை 25, 2011 01:55 AM
திருச்சி: சென்னை மணலியை சேர்ந்தவர் சரவணன் (19).
திருச்சி துவாக்குடியில் உள்ள என்.ஐ.டி.,யில் இன்ஜினியரிங் படித்து வந்தார். இவரது நண்பர்கள் கவுதமன், பரத்வாஜ் உள்ளிட்ட 15 பேர் நேற்று முன்தினம் மாலை கல்லணைக்கு சுற்றுலாவாக சைக்கிளில் சென்றனர்.
சரவணன், கவுதமன், பரத்வாஜ் ஆகியோர் கொள்ளிடம் ஆற்றில் இறங்கி குளித்தனர். அப்போது, கவுதமனும், சரணவனும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர். பரத்வாஜ் நீந்தி சென்று கவுதமனை காப்பாற்றினார். சரவணனை காப்பாற்ற முடியவில்லை. அவர் பரிதாபமாக தண்ணீரில் மூழ்கி இறந்தார். இதுகுறித்து தோகூர் போலீஸார் விசாரிக்கின்றனர். சரவணனின் சடலத்தை தேடும் பணி நடக்கிறது.