/உள்ளூர் செய்திகள்/கடலூர்/பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க கலெக்டர் அமுதவல்லி வேண்டுகோள்பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க கலெக்டர் அமுதவல்லி வேண்டுகோள்
பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க கலெக்டர் அமுதவல்லி வேண்டுகோள்
பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க கலெக்டர் அமுதவல்லி வேண்டுகோள்
பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க கலெக்டர் அமுதவல்லி வேண்டுகோள்
ADDED : ஜூலை 23, 2011 11:39 PM
நடுவீரப்பட்டு : ''தேசிய ஊராக வேலை வாய்ப்பு திட்டத்தில் சம்பாதிக்கும் வருமானத்தில் ஒரு சதவீதமாவது சேமிக்க வேண்டும்'' என கலெக்டர் பேசினார்.
பண்ருட்டி அடுத்த சி.என்.பாளையம் ஊராட்சியில் நேற்று கிராம சபைக்கூட்டம் நடந்தது. ஊராட்சி தலைவர் வைத்திலிங்கம் தலைமை தாங்கினார். பி.டி.ஓ.,க்கள் சீனுவாசன், பத்மநாபன், முழு ஊரக சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ், வி.ஏ.ஓ., ஜோதிமணி, ஊராட்சி துணைத்தலைவர் ராஜமாணிக்கம் மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் சிறப்பு பார்வையாளர் கலெக்டர் அமுதவல்லி பேசியதாவது: தற்போது அனைவரும் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் சென்று சம்பாதித்து வருகின்றனர். அதில் வரும் வருமானத்தில் ஒரு சதவீதமாவது சேமிக்க வேண்டும். ஒவ்வொருவரும் தங்கள் குழந்தைகளை ஆண், பெண் என்று பார்க்காமல் அனைத்து குழந்தைகளையும் குறைந்தது பிளஸ் 2 வரைக்கும் படிக்க வைக்க வேண்டும். அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து, துணி மற்றும் பேப்பர் பைகளை பயன்படுத்த வேண்டும். இவ்வாறு கலெக்டர் அமுதவல்லி பேசினார்.