/உள்ளூர் செய்திகள்/கடலூர்/கட்டண சேனல்கள் அரசு கேபிள் மூலமாக ஒளிபரப்ப கோரிக்கைகட்டண சேனல்கள் அரசு கேபிள் மூலமாக ஒளிபரப்ப கோரிக்கை
கட்டண சேனல்கள் அரசு கேபிள் மூலமாக ஒளிபரப்ப கோரிக்கை
கட்டண சேனல்கள் அரசு கேபிள் மூலமாக ஒளிபரப்ப கோரிக்கை
கட்டண சேனல்கள் அரசு கேபிள் மூலமாக ஒளிபரப்ப கோரிக்கை
ADDED : ஜூலை 23, 2011 11:38 PM
சிதம்பரம் : அனைத்து கட்டண சேனல்களும் அரசு கேபிள் மூலமாக ஒளிபரப்பு செய்ய வேண்டும் என கடலூர் மாவட்ட கேபிள் 'டிவி' ஆபரேட்டர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
கடலூர் மாவட்ட அரசு கேபிள் 'டிவி' ஒளிபரப்பாளர்கள் சங்க மாவட்ட கூட்டம் மாவட்ட தலைவர் ஜாகீர் உசேன் தலைமையில் சிதம்பரத்தில் நடந்தது. மாநிலச் செயலர் வாசுதேவன், மாநில துணைத் தலைவர் கோமதி விநாயகம் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். மாநில தலைவர் யுவராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். கூட்டத்தில், கேபிள் 'டிவி' ஆபரேட்டருக்கு அறிவித்த சர்வீஸ் சார்ஜ் ஒரு இணைப்புக்கு 75 ரூபாய்க்கு தர அரசு அனுமதிக்க வேண்டும். கடந்த ஆட்சியில் ஆபரேட்டர்களிடமிருந்து அபகரிக்கப்பட்ட ஏரியாவை திரும்ப பெற்றுத்தர வேண்டும். கடலூர் மாவட்டத்தில் உள்ள 1,200 கேபிள் ஆபரேட்டர்களுக்கு இடைத்தரர்கள் இல்லாமல் அரசு கேபிள் 'டிவி' கார்ப்பரேஷன் மூலம் நேரடியாக இணைப்பு வழங்க வேண்டும். அனைத்து கட்டண சேனல்களும் அரசு கேபிள் மூலமாக ஒளிபரப்பு செய்வதுடன், தமிழ்மொழி சேனல்கள் அனைத்தும் தமிழ்நாட்டில் இலவசமாக வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைப்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முத்து நன்றி கூறினார்.