தீவிரவாதிகளை கண்காணிக்க வீட்டு உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை
தீவிரவாதிகளை கண்காணிக்க வீட்டு உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை
தீவிரவாதிகளை கண்காணிக்க வீட்டு உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை
ADDED : ஜூலை 23, 2011 12:07 AM
ராமநாதபுரம் : மும்பை குண்டுவெடிப்பை தொடர்ந்து தமிழகத்தில் தீவிரவாதிகள் நடமாட்டம் உள்ளதா என்பதை கண்காணித்து வருகின்றனர்.
இதற்காக வீடுகளில் வாடகைக்கு தங்கியுள்ளோர் குறித்த விபரங்களை உரிமையாளர்கள், அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் தெரிவிக்க வேண்டும் என அறிவுருத்தப்பட்டுள்ளது.
மும்பை வெடிகுண்டு சம்பவத்தை தொடர்ந்து கடலோர மாவட்டங்கள் வழியாக ஊடுருவல் இருக்கலாம் என்ற சந்தேகம் வலுவடைந்துள்ளது. இதையடுத்து கடலோர மாவட்ட எஸ்.பி.,களுக்கு பல உத்தரவுகள் இடப்பட்டள்ளது.
இது குறித்து ராமநாதபுரம் எஸ்.பி., அனில்குமார் கிரி அறிக்கை:பல இடங்களில் தீவிரவாதிகள், நல்லவர்கள் போல் வேடமிட்டு வீடுகளில் வாடகைக்கு தங்கி, குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக தகவல் வந்துள்ளது. இதை தடுக்க பொது மக்கள், தங்கள் வீடுகளில் வாடகைக்கு தங்கி உள்ளோம் விபரத்தையும், வியாபார நிறுவனத்திற்கு வாடகைக்கு விடப்பட்ட விபரத்தையும், அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் தெரிவிக்க வேண்டும். இதற்காக போலீஸ் ஸ்டேஷன்களில் தனி பதிவேட்டில் பதிய வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.