/உள்ளூர் செய்திகள்/கரூர்/மணல் ஏற்ற தனி குவாரிகள் டாரஸ் லாரிகள் உரிமையாளர் சங்க கூட்டத்தில் தீர்மானம்மணல் ஏற்ற தனி குவாரிகள் டாரஸ் லாரிகள் உரிமையாளர் சங்க கூட்டத்தில் தீர்மானம்
மணல் ஏற்ற தனி குவாரிகள் டாரஸ் லாரிகள் உரிமையாளர் சங்க கூட்டத்தில் தீர்மானம்
மணல் ஏற்ற தனி குவாரிகள் டாரஸ் லாரிகள் உரிமையாளர் சங்க கூட்டத்தில் தீர்மானம்
மணல் ஏற்ற தனி குவாரிகள் டாரஸ் லாரிகள் உரிமையாளர் சங்க கூட்டத்தில் தீர்மானம்
ADDED : ஜூலை 22, 2011 11:59 PM
கரூர்: 'கரூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள மணல் குவாரிகளில் டாரஸ் லாரிகளில் மணல் ஏற்ற தனி குவாரிகள் ஒதுக்க வேண்டும்' என டாரஸ் லாரிகள் உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கரூர் மாவட்ட டாரஸ் மணல் லாரிகள் உரிமையாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் ஜி.ஆர்., திருமண மண்டப்பத்தில் நடந்தது. மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் ராஜூ தலைமை வகித்தார். கூட்டத்தில் கரூர் மாவட்டத்தில் 650 டாரஸ் லாரிகள் உள்ளன. ஆனால் டாரஸ் லாரிகளில் மணல் ஏற்ற உடனடியாக அனுமதிப்பது இல் லை. இதனால் 200 கிலோ மீட்டர் தூரம் உள்ள அன்பில், பூண்டி, திருமலை வாடியில் மணல் எடுத்து வருகிறோம். இதனால் ஏற்படும் போக்குவரத்து செலவை குறைக்க தனி குவாரி ஒன்றை லாரி டாரஸ் லாரிகளில் மணல் ஏற்ற அனுமதிக்க வேண்டும், கரூர் மாவட்டத்தில் நெ ரூர் அல்லது என்.புதூரில் தனி குவாரி அமைக்க வேண்டும், டாரஸ் லாரிகளில் மணல் ஏற்ற ஒரு வாரம் வரை ஆகிறது. இதனால் டிரைவர்களுக் கு ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்க உடனடியாக மணல் அள்ள அனுமதிக்க வேண்டும் உ ள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. டாரஸ் மணல் லாரிகள்கள் சங்க மாவட்ட தலைவர் மணிவண்ணன், துணை தலைவர் மோகன், செயலாளர் கண்ணன், துணை செயலாளர் முத்து, பொருளாளர் சந்திரமோகன் உள்பட பலர் பங்கேற்றனர்.