/உள்ளூர் செய்திகள்/கரூர்/கரூரில் பாரதீய மஸ்தூர் சங்க செயற்குழுக் கூட்டம்கரூரில் பாரதீய மஸ்தூர் சங்க செயற்குழுக் கூட்டம்
கரூரில் பாரதீய மஸ்தூர் சங்க செயற்குழுக் கூட்டம்
கரூரில் பாரதீய மஸ்தூர் சங்க செயற்குழுக் கூட்டம்
கரூரில் பாரதீய மஸ்தூர் சங்க செயற்குழுக் கூட்டம்
ADDED : ஜூலை 22, 2011 11:59 PM
கரூர்: கரூர் மாவட்ட பாரதீய மஸ்தூர் சங்க செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் துரை ரவி தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் பி.எம்.எஸ்., ஸ்தாபகர் தினம் இவ்வாண்டு லஞ்ச ஒழிப்பு பிரச்சார தினமாக நடத்துவது, நொய்டாவில் நடக்கும் மத்திய தொழிலாளர் கல்வி பயிற்சி வகுப்புக்கு கரூர் மாவட்டத்தில் இருந்து மூன் பேர் பங்கேற்பது.
நவம்பர் 23ம் தேதி டில்லியில் பாராளுமன்றம் நோக்கி நடக்கும் மாபெரும் தொழிலாளர் பேரணிக்கு கரூர் மாவட்டத்தில் இருந்து 100 பங்கேற்பது, 2012ல் கரூரில் நடக்கும் 10வது மாநில மாநாட்டை முன்னிட்டு பரவலாக கிளைகள் துவக்குவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அகில பாரத செயலாளர் ஸ்ரீமான் துரைராஜ், மாவட்ட செயலாளர் சவுந்திர ராஜன், மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், அகில பாரத கட்டுமான பேரவை துணை தலைவர் ஆனந்தராஜ், மாவட்ட கட்டுமான சங்க தலைவர் ஆண்டவன் உட்பட பலர் பங்கேற்றனர்.