ADDED : ஜூலை 21, 2011 10:16 PM
புதுடில்லி: காங்கிரஸ் மூத்த தலைவரும், ஆந்திர முன்னாள் கவர்னருமான என்.டி.திவாரி, டில்லி கோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்தார்.
அதில்,'ரோகித் என்பவர், நான் தான் (திவாரி), அவரின் தந்தை எனவும், அதை நிரூபிக்க, எனது ரத்த மாதிரியை சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். என் அரசியல் வாழ்வை களங்கப்படுத்தும் வகையில், இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனவே, என் ரத்த மாதிரி சோதனைக்கு உட்படுத்துவதை நான் விரும்பவில்லை' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. திவாரியின் ரத்த மாதிரியை, சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என, ஏற்கனவே கோர்ட் உத்தரவிட்டுள்ள நிலையில், அவர் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார்.