தி.மு.க., நிர்வாகிகள் ஜாமீன் மனு ஒத்திவைப்பு
தி.மு.க., நிர்வாகிகள் ஜாமீன் மனு ஒத்திவைப்பு
தி.மு.க., நிர்வாகிகள் ஜாமீன் மனு ஒத்திவைப்பு
UPDATED : ஜூலை 21, 2011 03:46 PM
ADDED : ஜூலை 21, 2011 03:29 PM
மதுரை: நிலமோசடி புகார் தொடர்பாக கைது செய்யப்பட்ட மதுரை தி.மு.க., நகரச்செயலாளர் தளபதி உள்ளிட்ட 4 பேரது ஜாமீன் மனு மீதான விசாரணையை ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
திருமங்கலத்தில் நில மோசடியில் ஈடுபட்டதாக மதுரை தி.மு.க., நகரச்செயலாளர் தளபதி, தி.மு.க., தலைமைச் செயற்குழு உறுப்பினர் சுரேஷ் பாபு, திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் கொடி சந்திரசேகர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டு பாளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று மதுரை முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்நிலையில், வேறொரு வழக்கு தொடர்பாக, ஜே.எம்.1 கோர்ட்டில் வழக்கு விசாரணையை வக்கீல்கள் புறக்கணித்து வருகின்றனர். இன்று தி.மு.க., நிர்வாகிகள் வழக்கு அங்கு விசாரணைக்கு வந்ததால் பரபரப்பு நிலவியது. இதையடுத்து வழக்கு விசாரணையை நாளை வரை நீதிபதி ஒத்திவைத்தார்.