Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/உதவியாளர் இல்லாத வாகனம் உரிமம் ரத்து: கலெக்டர் எச்சரிக்கை

உதவியாளர் இல்லாத வாகனம் உரிமம் ரத்து: கலெக்டர் எச்சரிக்கை

உதவியாளர் இல்லாத வாகனம் உரிமம் ரத்து: கலெக்டர் எச்சரிக்கை

உதவியாளர் இல்லாத வாகனம் உரிமம் ரத்து: கலெக்டர் எச்சரிக்கை

ADDED : ஜூலை 21, 2011 01:15 AM


Google News

நாமக்கல்: 'பள்ளி, கல்லூரி வாகனங்களில் மாணவ, மாணவியரை ஏற்றி, இறக்க உதவியாளர் இல்லையென்றால் வாகன உரிமம் ரத்து செய்யப்படும்' என, மாவட்ட கலெக்டர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:நாமக்கல் மாவட்டத்தில், தனியார், பள்ளி கல்லூரி நிர்வாகத்தினரால் இயக்கப்படும் வாகனம், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி இயக்க வேண்டும்.

இதை, சம்மந்தப்பட்ட பள்ளி, கல்லூரி நிர்வாகத்தினர் தவறாமல் பின்பற்ற வேண்டும். ஆர்.டி.ஓ., தலைமையில் வாகனங்களை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவினர், ஒவ்வொரு மாதமும் அதை ஆய்வு செய்வர். கடந்த, 13ம் தேதி கார்கூடல்பட்டி அருகே சுவாமி மெட்ரிக் பள்ளி வாகனத்தில் இருந்து தவறி விழுந்த சிறுவன் ஒருவர் உயிரிழந்தார்.வாகனத்தில் உதவியாளர் இல்லாததால், அந்த வாகனத்தின் பர்மிட் ரத்து செய்யப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி வாகனங்கள் இயக்கும்போது, மாணவ, மாணவியரை ஏற்றி, இறக்க கட்டாயம் உதவியாளர் இருக்க வேண்டும். உதவியாளர் இல்லாத வாகனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும். மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதியில், வட்டார போக்குவரத்து அலுவலர் தலைமையில், 1,094 வாகனம் தணிக்கை செய்யப்பட்டது. அதில், 138 வாகனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us