/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/பால் உற்பத்தியாளர் குறைதீர் கூட்டம்: கலெக்டர் தகவல்பால் உற்பத்தியாளர் குறைதீர் கூட்டம்: கலெக்டர் தகவல்
பால் உற்பத்தியாளர் குறைதீர் கூட்டம்: கலெக்டர் தகவல்
பால் உற்பத்தியாளர் குறைதீர் கூட்டம்: கலெக்டர் தகவல்
பால் உற்பத்தியாளர் குறைதீர் கூட்டம்: கலெக்டர் தகவல்
ADDED : ஜூலை 21, 2011 01:15 AM
நாமக்கல்: 'ஜூலை 26ம் தேதி, பால் உற்பத்தியாளர்கள் குறைதீர் கூட்டம் நடக்க உள்ளது' என, மாவட்ட கலெக்டர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பால் உற்பத்தியாளர்களின் குறைதீர் நாள் கூட்டம், வரும் 26ம் தேதி, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடக்க உள்ளது.
அந்தக் கூட்டத்தில், ஆவின் அலுவலர்கள் மற்றும் மாவட்டத்தில் உள்ள கால்நடை கல்லூரி வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள், கால்நடை மற்றும் பராமரிப்புத் துறை, வேளாண்மைத் துறை, துணை பதிவாளர் (பால்வளம்) ஆகியோர் பங்கேற்று பால் உற்பத்தியாளர்களின் அன்றாட நடைமுறை பிரச்னைகள் பற்றி கலந்தாலோசிக்க உள்ளனர்.எனவே, மாவட்டத்தில் உள்ள பால் உற்பத்தியார்கள் சங்க பிரதிநிதிகள், பால் உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகள் ஆகியோர் அக்கட்டத்தில் பங்கேற்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


