Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/மண், இலை வழி நோய் கட்டுபடுத்தும் வழிமுறை: துணை இயக்குனர் தகவல்

மண், இலை வழி நோய் கட்டுபடுத்தும் வழிமுறை: துணை இயக்குனர் தகவல்

மண், இலை வழி நோய் கட்டுபடுத்தும் வழிமுறை: துணை இயக்குனர் தகவல்

மண், இலை வழி நோய் கட்டுபடுத்தும் வழிமுறை: துணை இயக்குனர் தகவல்

ADDED : ஜூலை 21, 2011 01:15 AM


Google News

நாமக்கல்: 'சூடோமோனாஸ் ஃப்ளோரசன்ஸ் மண் மற்றும் இலை வழி மூலம் பரவும் நோயை கட்டுப்படுத்துகிறது' என, வேளாண் துணை இயக்குனர் நடராஜன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:சூடோமோனாஸ் ஃப்ளோரசன்ஸ், மண்ணின் மூலம் பரவும் நோய்களுக்கான வேரழுகல், வாடல் நோய் போன்றவற்றை கட்டுப்படுத்துகிறது.

தவிர, இலை வழி மூலம் பரவும் பூசான நோய்களான குலைநோய், இலை உறை அழுகல் நோய், இலைப் புள்ளி நோய் ஆகியவற்றின் பாதிப்பையும் குறைக்கிறது.தவிர, பயிர்களை தாக்கும் மற்ற பாக்டீரியா மற்றும் வைரஸ் நோய்களையும் கட்டுப்படுத்துகிறது. இந்த பாக்டீரியம் மற்ற உயிர் எதிர் காரணிகளான டிரைக்கோடெர்மா விருடி மற்றும் பேசில்லஸ் ஆகியவற்றுடன் நன்கு ஒற்றுமை உடையதாக உள்ளது.அவற்றை கூட்டாக பயன்படுத்தும்போது, நோய் கட்டுப்படுத்தும் திறன் அதிகரிக்கிறது. இந்த பாக்டீரியம் நோய்களைக் கட்டுப்படுத்துவோடு மட்டுமல்லாமல் வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஹார்மோன்களான ஆக்ஸின், ஜிப்ரலின் மற்றும் இன்டோல் அசிடிக் அமிலம் ஆகியவற்றை சுரந்து பயிர்களின் வளர்ச்சியை அதிகரிக்கிறது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us