/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/மணல் கடத்தினால் குண்டர் சட்டம் பாயும்: கலெக்டர் கடும் எச்சரிக்கைமணல் கடத்தினால் குண்டர் சட்டம் பாயும்: கலெக்டர் கடும் எச்சரிக்கை
மணல் கடத்தினால் குண்டர் சட்டம் பாயும்: கலெக்டர் கடும் எச்சரிக்கை
மணல் கடத்தினால் குண்டர் சட்டம் பாயும்: கலெக்டர் கடும் எச்சரிக்கை
மணல் கடத்தினால் குண்டர் சட்டம் பாயும்: கலெக்டர் கடும் எச்சரிக்கை
ADDED : ஜூலை 21, 2011 01:15 AM
நாமக்கல்: 'கற்கள், மண் மற்றும் மணல் கடத்துவோர், குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவர்' என, மாவட்ட கலெக்டர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:நாமக்கல் மாவட்டத்தில், அரசு புறம்போக்கு நிலத்தில் மணல், கற்கள் மற்றும் மண் ஆகியவை வியாபார நோக்கத்துக்காக கடத்திச் செல்லப்படுவதாக ஃபோன் மூலமும், மனுக்களாகவும் புகார் வருகின்றன.
அரசு புறம்போக்கு நிலமாக இருந்தாலும் அல்லது சொந்த பட்டா நிலமாக இருந்தாலும், மாவட்ட கலெக்டரின் முறையான உரிமம் அல்லது அனுமதி பெற்றுதான் மணல், கற்கள் மற்றும் மண் எடுத்துச் செல்ல வேண்டும்.முறையான அனுமதியின்றி மண் கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மணல் கடத்தல் மூலம் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. அவற்றை வருவாய்த்துறையினர் தடுக்க முற்படும்போது, அவர்களை தாக்குவதும், கீழ்த்தரமாக பேசுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.எனவே, கற்கள், மணல், மண் கடத்துவோர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவர். போடிநாயக்கன்பட்டியை சேர்ந்த மணிமாலன், ராஜசேகர் மற்றும் டிரைவரும் சேர்ந்து, பொட்டிரெட்டிப்பட்டி கிராம வி.ஏ.ஓ., மீது தாக்குதல் நடத்தியதுடன், வருவாய்த்துறை ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்த குற்றத்துக்காக, அவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதுபோல், நாமக்கல், பாப்பிநாயக்கன்பட்டி அரசு புறம்போக்கு நிலத்தில் தொடர்ந்து கற்களை வெட்டி எடுத்ததற்காகவும், அக்கிராம வி.ஏ.ஓ.,வுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாலும் ஆர்.பி. புதூரைச் சேர்ந்த அறிவழகன் என்பவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.தாளம்பாடியை சேர்ந்த வரதராஜன் என்பவர், கற்கள், மண் வெட்டிக் கடத்திய குற்றத்துக்காக குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


