/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/மச்சான் நிலத்தை "கபலீகரம்' செய்த மாமா போலீஸார் மீட்டு ஒப்படைப்புமச்சான் நிலத்தை "கபலீகரம்' செய்த மாமா போலீஸார் மீட்டு ஒப்படைப்பு
மச்சான் நிலத்தை "கபலீகரம்' செய்த மாமா போலீஸார் மீட்டு ஒப்படைப்பு
மச்சான் நிலத்தை "கபலீகரம்' செய்த மாமா போலீஸார் மீட்டு ஒப்படைப்பு
மச்சான் நிலத்தை "கபலீகரம்' செய்த மாமா போலீஸார் மீட்டு ஒப்படைப்பு
ADDED : ஜூலை 21, 2011 01:15 AM
ராசிபுரம்: ராசிபுரம் அருகே மச்சான் நிலத்தை அபகரித்த மாமாவிடம் இருந்து மீட்கப்பட்ட நிலம், உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே புளியங்குறிச்சியைச் சேர்ந்தவர் சின்னையன் (37).
அவரது மனைவி தனலட்சுமி. சின்னையன் கடந்த, 1996ம் ஆண்டு முதல் சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வந்தார். ஆண்டுக்கு ஒருமுறை தனது சொந்த ஊருக்கு வந்து செல்வார்.சின்னையன் சகோதரி ஆனந்தி. அவர், தனது கணவர் கோவிந்தனுடன் மங்களபுரத்தில் வசித்து வருகிறார். கோவிந்தன், வாழப்பாடியில் அரசு போக்குவரத்து கழக பஸ்சில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். சின்னையன் சவுதி அரேபியாவில் வேலை பார்த்து சம்பாதித்த பணத்தை, தனது மாமா கோவிந்தனுக்கு அனுப்பி விவசாயம் நிலம் வாங்குமாறு கூறினார்.அதை தொடர்ந்து, கடந்த, 2008ம் ஆண்டு முதல் சின்னையன் அனுப்பிய, 11 லட்சம் ரூபாய் பணத்தை கொண்டு, மெட்டாலா அருகில் உள்ள பிலிப்பாகுட்டை பிட்டு 1 என்ற பகுதியில், 3.66 ஏக்கர் விவசாய நிலம் வாங்கி, அதை சின்னையன் மனைவி தனலட்சுமி பெயரில் பதிவு செய்தார்.அப்பொழுது முதல் அந்த விவசாய நிலத்தை கோவிந்தன் அனுபவித்து வந்தார். அதில் வரும் வருமானம் முழுவதும் கோவிந்தனே எடுத்துக் கொண்டார். தனலட்சுமி மீது கிரையம் செய்த நிலத்து பத்திரத்தையும் தானே வைத்துக் கொண்டார். நான்கு ஆண்டுகளாக விவசாய நிலம் முழுவதையும் கோவிந்தன் அனுபவித்த நிலையில், தனது மச்சான் குடும்பத்துக்கு எவ்வித பண உதவியும் செய்யவில்லை.இந்நிலையில், சின்னையன் சவுதி அரேபியாவில் இருந்து கடந்த, 2010ம் ஆண்டு சொந்த ஊருக்கு திரும்பினார். பின், பிலிப்பாகுட்டைக்கு சென்று தனது மாமா கோவிந்தனிடம், தனது மனைவி கிரையம் செய்யப்பட்ட விவசாய நிலத்தை திருப்பி தருமாறு கேட்டார்.அதற்கு கோவிந்தன், 'அந்த நிலம் என்னுடையது; நான்தான் விவசாயம் செய்து வருகிறேன். நிலத்தை தர முடியாது. உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள்' எனக்கூறி, பத்திரத்தையும் தரமறுத்தார். மாமாவின் மோசடியால் கடும் அதிர்ச்சி அடைந்த சின்னையன், இது குறித்து ராசிபுரம் டி.எஸ்.பி.,யிடம் புகார் மனு அளித்தார்.மேலும், நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள நில அபகரிப்பு மீட்பு பிரிவிலும் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் விசாரணை மேற்கொண்டார். விசாரணை முடிவில், கோவிந்தன் மீது மோசடி உள்பட இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.அதை தொடர்ந்து, 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலத்தையும், அதன் பத்திரத்தையும் மீட்டு சின்னையன், தனலட்சுமி தம்பதியரிடம் ஒப்படைக்கப்பட்டது. தனலட்சுமியிடம் இருந்து அடகு வைப்பதற்காக பெறப்பட்ட, 22 பவுன் தங்க நகையும் மீட்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.பிலிப்பாகுட்டைக்கு, நாமக்கல் எஸ்.பி., பிரவேஷ்குமார் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில்,''நாமக்கல் மாவட்டத்தில் நில அபகரிப்பு பிரிவில் இதுவரை, 249 புகார்கள் பெற்பட்டுள்ளன. அதில், 15 புகார்களின் மீது வழக்குக ள் பதிவு செய்யப்பட்டுள்ளது.இதுவரை, 18 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த புகார்களில் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த, 10 பேர் மீது புகார் உள்ளது,'' என்றார்.


