/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/நகராட்சி அதிகாரியை பொதுமக்கள் முற்றுகைநகராட்சி அதிகாரியை பொதுமக்கள் முற்றுகை
நகராட்சி அதிகாரியை பொதுமக்கள் முற்றுகை
நகராட்சி அதிகாரியை பொதுமக்கள் முற்றுகை
நகராட்சி அதிகாரியை பொதுமக்கள் முற்றுகை
ADDED : ஜூலை 21, 2011 12:57 AM
அனுப்பர்பாளையம் : கோழி, மீன் கழிவுகளை கொட்டும் குப்பை தொட்டியை அப்புறப்படுத்தக்கோரி, 15 வேலம்பாளையம் நகராட்சி அதிகாரியை பொதுமக்கள் நேற்று முற்றுகையிட்டனர்.திருப்பூர், 15 வேலம்பாளையம் நகராட்சி ஐந்தாவது வார்டுக்கு உட்பட்ட மாதேஸ்வரன் கோவில் வீதி ரோட்டோரத்தில் குப்பை தொட்டி வைக்கப்பட்டுள்ளது.
அதில், இறைச்சிக்கழிவுகளை வியா பாரிகள் கொட்டியுள்ளனர். அக்கழிவுகளை துப்புரவு தொழிலாளர்கள் உடனடியாக அகற்றாததால் துர்நாற்றம் வீசுகிறது; அப்பகுதி பொதுமக்கள் குடியிருக்கமுடியாத நிலையில் அவதிப்பட்டனர்.தே.மு.தி.க., நகர செயலாளர் கண்ணன், பொரு ளாளர் குமார் ஆகியோர் தலைமையில் அப்பகுதி பொதுமக்கள் நகராட்சிக்கு நேற்று வந்தனர். செயல் அலுவலர் (பொறுப்பு) மல்லிகையை முற்றுகையிட்டு, குப்பை தொட்டியை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். அக்கோரிக்கை உடனடியாக ஏற்கப்பட்டு, குப்பை தொட்டி அகற்றப்பட்டது; பொது மக்கள் கலைந்து சென்றனர்.


