ADDED : ஜூலை 20, 2011 10:44 AM
மதுரை: மதுரை திருநகர் சவீதாபாய் மேல்நிலைப் பள்ளியில் தேசிய பசுமைப்படை, இளம் செஞ்சிலுவை சங்கம், ரெட் ரிப்பன் கிளப், என்.எஸ்.எஸ்., என்.சி.சி., உட்பட பல்வேறு அமைப்புகளின் துவக்க விழா நடந்தது.
கல்வி வளர்ச்சி நாளும் கடை பிடிக்கப்பட்டது. தலைமை ஆசிரியர் ரமேஷ்பாபு தலைமை வகித்தார். தமிழாசிரியர் சந்திரகாசன் வரவேற்றார். அமைப்புகளின் பொறுப்பாளர்கள் ராஜகோபால், இந்திராணி, நாகராஜன், ஜான்அமிர்தராஜ் பேசினர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ஓய்வு பெற்ற ஆசிரியை சுப்புலட்சுமி பரிசு வழங்கினார்.
உதவி ஆசிரியர் அலெக்ஸிஸ் நன்றி கூறினார்.