/உள்ளூர் செய்திகள்/திருச்சி/தி.மு.க., நிர்வாகி நில அபகரிப்பு புகாரில் கைது : திருச்சியில் போலீஸ் தேடுதலால் பயந்து தானாக நேரில் வந்து சரண்தி.மு.க., நிர்வாகி நில அபகரிப்பு புகாரில் கைது : திருச்சியில் போலீஸ் தேடுதலால் பயந்து தானாக நேரில் வந்து சரண்
தி.மு.க., நிர்வாகி நில அபகரிப்பு புகாரில் கைது : திருச்சியில் போலீஸ் தேடுதலால் பயந்து தானாக நேரில் வந்து சரண்
தி.மு.க., நிர்வாகி நில அபகரிப்பு புகாரில் கைது : திருச்சியில் போலீஸ் தேடுதலால் பயந்து தானாக நேரில் வந்து சரண்
தி.மு.க., நிர்வாகி நில அபகரிப்பு புகாரில் கைது : திருச்சியில் போலீஸ் தேடுதலால் பயந்து தானாக நேரில் வந்து சரண்
ADDED : ஜூலை 19, 2011 12:29 AM
திருச்சி: திருச்சியில் நில அபகரிப்பு புகாரில் தி.மு.க., பகுதி செயலாளரை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர் முன்னாள் அமைச்சர் நேருவின் நெருங்கிய ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் நிலஅபகரிப்பு தொடர்பான புகார்களை விசாரிக்க முதல்வர் ஜெயலலிதா போலீஸாருக்கு உத்தரவிட்டது முதல், கடந்த 15 நாட்களுக்கும் மேலாக மாநிலம் முழுவதும் தி.மு.க.,வினர் மீது புகார்கள் குவிந்து வருகிறது. சேலம், கோவை, திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் நில அபகரிப்பு புகார்களில் முக்கிய தி.மு.க., பிரமுகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி மாவட்டத்தை பொறுத்த வரை துறையூரில் தி.மு.க., நகர பொருளாளர் செல்வம் என்பவர் நில அபகரிப்பு வழக்கிலும், மாநகரில் தி.மு.க., மலைக்கோட்டை பகுதி செயலாளர் மதிவாணன், தி.மு.க., மாவட்ட பொருளாளர் தம்பி மூர்த்தி, தி.மு.க., மாநகராட்சி கோட்டத்தலைவர் அறிவுடைநம்பி ஆகியோர் இதுவரை நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்னும் பலர் மீது திருச்சி மாநகரில் நில அபகரிப்பு தொடர்பாக புகார் வந்துள்ளது. அதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே தி.மு.க.,வினர் மீது நில அபகரிப்பு தொடர்பாக புகார்கள் வந்துள்ளதுபோல், திருச்சி மாநகர காஜாமலை பகுதி தி.மு.க., செயலாளராக இருக்கும் விஜய் மீதும் புகார் வந்துள்ளது. ஏற்கனவே, விஜய் மீது கடந்த 2010ம் ஆண்டு நில அபகரிப்பு தொடர்பாக சந்திரசேகர் என்பவர் கொடுத்த புகார் உள்பட மூன்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் கே.கே.நகர் போலீஸ் ஸ்டேஷனில் உள்ளது.காஜாமலை பகுதியில் எஸ்.டி.டி., பூத் வைத்திருக்கும் கலியமூர்த்தி (72) என்பவருக்கு 40 ஆயிரம் அடியில் உள்ள நிலத்தை ஆக்கிரமித்து பகுதி செயலாளர் விஜய் தகராறு செய்துள்ளார். இதுகுறித்து அவர் கே.கே.நகர் போலீஸில் சமீபத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் விஜய்யை தேடி வந்தனர். ஆனால், போலீஸ்துறையில் உள்ள தனது விசுவாசிகள் மூலம் தன்னை போலீஸ் கைது செய்ய வருவதை முன்கூட்டியே தெரிந்து கொண்ட விஜய், போலீஸ் பிடியில் சிக்காமல் தலைமறைவாகி விட்டார். அவரை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் மாசானமுத்து தனிப்படை அமைத்திருந்தார். அவர்களும் விஜய் இருக்கும் இடத்தை நெருங்கிக் கொண்டிருந்தனர். இதனால் விஜய் கலக்கமடைந்தார்.
இந்நிலையில் நேற்று மாலை ஐந்து மணியளவில் காஜாமலை விஜய் தனது கட்சியினர் மற்றும் வக்கீல்களுடன் கே.கே.நகர் போலீஸ் ஸ்டேஷனில் வந்த சரணடைந்தார். அவருடன் துணைமேயர் அன்பழகன் உள்ளிட்ட கட்சியினர் வந்திருந்தனர். போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த விஜய்க்கு முன்னாள் அமைச்சர் நேரு நேரில் வந்து ஆறுதல் கூறிவிட்டுச் சென்றார். கலியமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில், தி.மு.க., பகுதி செயலாளர் காஜாமலை விஜய்யை கே.கே.நகர் போலீஸார் நில அபகரிப்பு புகாரில் கைது செய்தனர்.
விரைவில் 'குண்டாஸ்?' கடந்த தி.மு.க., ஆட்சியில் அமைச்சர் நேரு பெயரைச் சொல்லி ஆட்டம் போட்டவர்களில் முதன்மையானவர் காஜாமலை விஜய். இவர் ஜங்ஷன் பகுதியில் கடையை காலிசெய்ய காளைமாட்டை கடையின் முன்னால் கட்டி அராஜகத்தில் ஈடுபட்டவர். அப்படிப்பட்ட விஜய் மீது கே.கே.நகர் போலீஸில் மூன்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆகையால், நில அபகரிப்பு வழக்கில் கைதாகியுள்ள விஜய் மீது விரைவில், 'குண்டாஸ்' பாயும் என்று போலீஸார் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.