/உள்ளூர் செய்திகள்/கரூர்/மேட்டு மகாதானபுரம் கோவில் பக்தர்கள் ஆடி விரதம் துவக்கம்மேட்டு மகாதானபுரம் கோவில் பக்தர்கள் ஆடி விரதம் துவக்கம்
மேட்டு மகாதானபுரம் கோவில் பக்தர்கள் ஆடி விரதம் துவக்கம்
மேட்டு மகாதானபுரம் கோவில் பக்தர்கள் ஆடி விரதம் துவக்கம்
மேட்டு மகாதானபுரம் கோவில் பக்தர்கள் ஆடி விரதம் துவக்கம்
ADDED : ஜூலை 19, 2011 12:29 AM
லாலாப்பேட்டை: லாலாப்பேட்டை அடுத்துள்ள மகாதானபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட மேட்டு மகாதானபுரம் மகாலட்சுமி கோவிலில் ஆடி 19ம் தேதி தலையில் தேங்காய் உடைக்கும் திருவிழாவுக்கு பக்தர்கள் நேற்றுமுன்தினம் (ஆடி 1ம் தேதி) முதல் விரதம் இருக்க துவங்கினர்.
மேட்டுமகாதானபுரம் மகாலட்சுமி கோவில் இந்தியாவில் தனி கோவிலாக உள்ளது. ஆண்டுதோறும் தமிழ் மாதம் ஆடி 19ம் தேதி தலையில் தேங்காய் உடைக்கும் நேர்த்தி கடன் நூ தன வழிபாடு நடப்பது வழக்கம். நேர்த்தி கடன் செலுத்தும் பக்தர்கள் 18 நாள் முன்பாக ஆடி 1ம் தேதி அன்று மகாதானபுரம் காவிரி ஆற்றில் குளித்துவிட்டு கையில் மஞ்சள் கையிறு கட்டி விரதம் இருக்க துவங்கி, ஆடி 19ம் தேதி தலையில் தேங்காய் உடைத்து நேர்த்தி கடனை நிவர்த்தி செய்வது வழக்கம். அதேபோல் நேற்றுமுன்தினம் மகாதானபுரம் காவிரி ஆற்றில் பக்தர்கள் குளித்துவிட்டு, மகாலட்சுமி கோவிலில் சிறப்பு அபிஷேகத்திற்கு பின் முறைப்படி விரதத்தை பக்தர்கள் துவங்கினர். இவ்விழாவுக்கு கரூர், திருச்சி, கோவை, பொள்ளாச்சி, உடுமலைபேட்டை, கர்நாடகா, மைசூர் மற்றும் சென்னை, சேலம் உட்பட பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்பாடுகளை குளித்தலை, கரூர், திருச்சி இந்துசமய அறநிலையத்துறை அலுவலர்கள் செய்து வருகின்றனர்.