ADDED : ஜூலை 19, 2011 12:17 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான அழகிய கையெழுத்து போட்டி நடந்தது.
போட்டியில் கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதனையடுத்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடந்தது. அரசு அருங்காட்சிய காப்பாட்சியர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற உதவித்தொடக்க கல்வி அலுவலர் குப்புசாமி வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். விழாவில், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலை ஆசிரியர் பன்னீர் செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.