/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/நிரந்தர சாலை வந்தால் மீண்டும் சரிவில்லைநிரந்தர சாலை வந்தால் மீண்டும் சரிவில்லை
நிரந்தர சாலை வந்தால் மீண்டும் சரிவில்லை
நிரந்தர சாலை வந்தால் மீண்டும் சரிவில்லை
நிரந்தர சாலை வந்தால் மீண்டும் சரிவில்லை
ADDED : ஜூலை 17, 2011 01:26 AM
கூடலூர் : கூடலூர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே கோழிக்கோடு சாலையோரத்தில் மண் சரிந்த பகுதியில் நிரந்த தடுப்பு சுவர் அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
கூடலூர் கோழிக்கோடு சாலை பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, கடந்த மாதம் 21ம் தேதி சாலையோரத்தில் திடீரென மண் சரிவு ஏற்பட்டுள்ளது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாருதி ஆம்னி கார் கவிழ்ந்தது. மண் சரிவினால் சாலையில் வெடிப்பு ஏற்பட்டது. அப்பகுதியில் வாகன போக்கு வரத்துக்கு போலீசார் தடை விதித்தனர். மண் சரிவை கூடலூர் ஆர்.டி. ஓ., தனசேகரன் ஆய்வு செய்த போது, அப்பகுதியில் ஆழ்துளை கிணறு தோண்ட பயன்படுத்திய லாரியின் அதிர்வினால் சாலையோரத்தில் மண்சரிவு ஏற்பட்டதாக அப்பகுதியினர் தெரிவித்தனர். மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் தற்காலிகமாக மணல் மூட்டை அடுக்கப்பட்டு, வாகன போக்குவரத்துக்கு அனுமதி வழங்கியுள்ளனர். இப்பகுதியில் அதிக பாரம் கொண்ட கனரக வாகனங்கள் கடந்து செல்வதால், சாலை பலமிழந்து பாதிக்கும் நிலையுள்ளது. மணல் மூட்டைகளை அகற்றிவிட்டு, நிரந்த தடுப்புச் சுவர் அமைக்க நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.