/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/"வாட்' வரியை விலக்கி கொள்ள ஜவுளி உற்பத்தியாளர் கோரிக்கை"வாட்' வரியை விலக்கி கொள்ள ஜவுளி உற்பத்தியாளர் கோரிக்கை
"வாட்' வரியை விலக்கி கொள்ள ஜவுளி உற்பத்தியாளர் கோரிக்கை
"வாட்' வரியை விலக்கி கொள்ள ஜவுளி உற்பத்தியாளர் கோரிக்கை
"வாட்' வரியை விலக்கி கொள்ள ஜவுளி உற்பத்தியாளர் கோரிக்கை
ADDED : ஜூலை 17, 2011 01:19 AM
அவிநாசி : அரசின் 'வாட்' வரி விதிப்பால், விசைத்தறி தொழிலாளர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
'வாட்' வரியை விலக்கி கொள்ள வேண்டும் என, ஜவுளி உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக அரசு விசைத்தறியில் உற்பத்தியாகும் துணிக்கு 5 சதவீத'வாட்' வரி விதித்துள்ளது. இதனால் ஜவுளி உற்பத்தியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பல சிரமங்களுக்கு மத்தியில் தொழில் நடத்தி வரும் நிலையில், உற்பத்தியாளர்களுக்கு 'வாட்' வரி விதிப்பு பாதிப்பை ஏற்படுத்தும் என அச்சப்படுகின்றனர். தற்போது மந்தமாக உள்ள ஜவுளி மார்க்கெட், தொடர்ந்து சரியும் நிலையில் உற்பத்தியாளர்கள் உற்பத்தி நிறுத்தத்தை அறிவிக்க ஆலோசித்து வருகின்றனர். விசைத்தறியாளர்களுக்கு பாவு நூல் கொடுப்பதை உற்பத்தியாளர்கள் நிறுத்தும் போது, விசைத்தறி கூடங்களும் நின்று போகும். அதில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஜவுளி உற்பத்தியாளர்கள் கூறியதாவது: கடந்த ஒன்றரை ஆண்டாக விசைத்தறி தொழில் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. கடும் மின்வெட்டு, அபரிமிதமான நூல் விலை உயர்வு, தொழிலாளர் பற்றாக்குறை, ஜவுளி மார்க்கெட் சரிவு ஆகியவற்றால், தொழில் மிகவும் நலிவடைந்துள்ளது. இந்நிலையில் அரசு விதித்துள்ள 'வாட்' வரி, கடும்பாதிப்பை ஏற்படுத்துகிறது.தொழிலை நேரடியாகவும் மறைமுகமாகவும் நம்பி லட்சக்கணக்கான குடும்பத்தினர் உள்ளனர்; தொழில் பாதிக்கப்பட்டால் அனைவரின் வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்படும். விசைத்தறி தொழில், அதில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நலன் காக்க, தமிழக அரசு விசைத்தறி தொழிலுக்கு விதித்துள்ள 'வாட்' வரியை விலக்கி கொள்ள வேண்டும், என்று கூறினர்.