/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/பணம் இரட்டிப்பு மோசடிதென்காசியில் 4 பேர் கைதுபணம் இரட்டிப்பு மோசடிதென்காசியில் 4 பேர் கைது
பணம் இரட்டிப்பு மோசடிதென்காசியில் 4 பேர் கைது
பணம் இரட்டிப்பு மோசடிதென்காசியில் 4 பேர் கைது
பணம் இரட்டிப்பு மோசடிதென்காசியில் 4 பேர் கைது
தென்காசி:தென்காசி பகுதியில் பணம் இரட்டிப்பு மோசடியில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.கீழப்பாவூர் காமராஜர் சாலையை சேர்ந்தவர் முருகன்.
முருகனிடம் 10 ஆயிரத்தை பெற்றுக் கொண்ட 4 பேரும் கருப்பு நிற தாள் அடங்கிய 2 கட்டுகளை கொடுத்துள்ளனர். இது ரசாயனம் பூசிய 100 ரூபாய் தாள்கள். இதை தேவைக்கேற்ப போட்டோ கழுவ பயன்படுத்தப்படும் ஹைப்போ உப்பு கரைசலில் போட்டு கழுவினால் ஒரிஜனல் ரூபாய் தாளாக வந்து விடும் என கூறியுள்ளனர். இதனை செய்முறையும் செய்து காட்டியுள்ளனர். முருகன் கருப்பு தாள் கட்டுகளுடன் வீட்டிற்கு சென்று ஹைப்போ உப்பு கரைசலில் தாள்களை போட்ட போது அவை ரூபாய் நோட்டுகளாக மாறவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதாக முருகன் அறிந்து தென்காசி போலீசில் புகார் செய்தார். மாவட்ட போலீஸ் எஸ்.பி.விஜயேந்திர பிதாரி உத்தரவின் பேரில் தென்காசி டி.எஸ்.பி.பாண்டியராஜன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் திருப்பதி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆடிவேல், விஜயகுமார், சுப்பிரமணியன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் பேச்சிமுத்து, ஞானமுத்து, மாடப்பன், கிருஷ்ணன், ஏட்டு இதயத்துல்லா, மாரியப்பன் கொண்ட தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் தென்காசி பஸ்ஸ்டாண்டில் 4 பேர் நிற்பது தெரிய வந்தது. 4 பேரையும் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். பிடிபட்டவர்கள் மேலகரம் ராமராஜ், ஆண்டாள்புரம் மடத்துப்பட்டி ராஜ்மோகன் (48), சிவகாசி காளியம்மன் கோவில் தெரு செபாஸ்டியான் (42), திருத்தங்கல் ஆலமரத்துப்பட்டி ரோடு அன்பு செழியன் (49) என தெரிய வந்தது. அவர்களிடம் இருந்த 8 ஆயிரத்து 500 ரூபாய், கருப்பு தாள்கள் 7 கட்டுகள், பிளாஸ்டிக் கேனில் காஸ்பாலிக் அமிலம், பேஸ்ட் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.இதுபற்றி தென்காசி டி.எஸ்.பி.பாண்டியராஜன் கூறும் போது, பணம் இரட்டிப்பு செய்வதாக கூறி யாராவது பணம் கேட்டால் அதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுக்கவும். இதுபோல் ஏமாற்று பேர்வழிகளிடம் ஏமாந்து விட வேண்டாம் என கூறினார்.