/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்புஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு
ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு
ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு
ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு
ADDED : ஜூலை 15, 2011 12:45 AM
ஈரோடு: மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பை தொடர்ந்து ஈரோடு ரயில்வே ஜங்ஷனில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் நேற்று முன்தினம் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளால் 21க்கும் மேற்பட்டோர் பலியாகினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவத்தையடுத்து நாடு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு ரயில்வே ஜங்ஷனிலும் ரயில்வே போலீஸார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை(ஆர்.பி.எஃப்.,) வீரர்கள் முழு அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். ஸ்கேனர், மெட்டல் டிடெக்டர் உதவியுடன் ஒவ்வொரு பயணிகளையும், அவர்களது உடமைகளையும் சோதனையிட்டு அனுப்புகின்றனர். ரயில்வே ஸ்டேஷனுக்கு வரும் ஒவ்வொரு ரயிலிலும் ஒவ்வொரு பெட்டியாக சென்று, வெடிகுண்டு ஏதாவது உள்ளதா என்று சோதனையிட்டு வருகின்றனர். பயணிகளிடம் 'கேட்பாரற்று பொருட்கள் கிடந்தால், எடுக்க வேண்டாம் 'என்றும், 'உடனே போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கும்படியும்,' கூறி வருகின்றனர்.