/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/"வாட்' வரி உயர்வுக்கு ஜவுளி வணிகர்கள் எதிர்ப்பு"வாட்' வரி உயர்வுக்கு ஜவுளி வணிகர்கள் எதிர்ப்பு
"வாட்' வரி உயர்வுக்கு ஜவுளி வணிகர்கள் எதிர்ப்பு
"வாட்' வரி உயர்வுக்கு ஜவுளி வணிகர்கள் எதிர்ப்பு
"வாட்' வரி உயர்வுக்கு ஜவுளி வணிகர்கள் எதிர்ப்பு
ADDED : ஜூலை 15, 2011 12:40 AM
ஈரோடு: ஜவுளி மற்றும் ஜவுளி சார்ந்த உற்பத்தி பொருட்களுக்கு மாநில அரசு அறிவித்துள்ள ஐந்து சதவீதம், 'வாட்' வரியை வாபஸ்பெற வேண்டும் என, ஜவுளி வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு கிளாத் மெர்ச்சன்ட்ஸ் அசோசியேஷன் சார்பில், நேற்று, 'வாட்' வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டம் நடந்தது. தமிழக அரசு திடீரென பருத்தி மற்றும் கலப்பின துணி ரகங்களுக்கு, ஐந்து சதவீதம் 'வாட்' வரியை அறிவித்துள்ளது, வணிகர்களை கலங்கடித்துள்ளது.
சென்ற பட்ஜெட்டில் மத்திய அரசு 10 சதவீதம் கலால் வரி ஆயத்த மற்றும் மேடு அப்களுக்கு விதித்து துணி வணிகர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். இதனால், பஞ்சு விலை கிடு கிடுவென உயர்ந்தது. மீண்டும் வரலாறு காணாத விலை வீழ்ச்சி, மிக கடுமையான சுற்றுச் சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டுச் சட்டங்களால் திணறி வருகின்றனர். 'வாட்' வரி விதிப்பால் துணி வணிகம் பெரும் சிரமத்துக்கு ஆளாகும். தமிழகத்தின் முன்னோடி பருத்தித் துணி மற்றும் நூல் உற்பத்தி மையமாகத் ஈரோடு திகழ்கிறது. குஜராத், மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்கம் போன்ற முன்னணி மாநிலங்களை பின்னுக்குத் தள்ளி தமிழக மக்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்கு ஆதாரமாக ஜவுளி துறை விளங்குகிறது.
தொடர்ந்த வரி விதிப்புகளால் பருத்தி நூல் உற்பத்தி, பருத்தி துணி, நெசவு, சலவை, சாயமிடுதல், டையிங் போன்ற அனைத்து தொழில்களும் நசிவடைந்து, மற்ற மாநில உற்பத்தியாளர்களிடம் போட்டி போட முடியாமல் போகும். ஜவுளி துறை வேறு மாநிலத்துக்கு இடம் மாறும் அபாயத்தை சந்திக்க நேரிடும். எனவே, நூல் மேல் விதித்த 'வாட்' வரியை மட்டும் முன்பு போலவே, நீடிக்க வேண்டும். பருத்தியால் நெசவு செய்யப்பட்டு பல்வேறு பதனிடும் பணிகளுக்கு அரசின் கெடுபிடி இல்லாமல் கொண்டு செல்லவும், குறைந்த கல்வியறிவு கொண்ட நடுத்தர, சிறு வியாபாரிகள் மற்றும் உற்பத்தியாளர்களும் துணிவணிகம் செய்ய ஏதுவாக ஐந்து சதவீதம் வரியை துணி ரகங்களுக்கு விலக்க முதல்வர் உத்தரவிடவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அசோசியேஷன் தலைவர் குணசேகரன் தலைமை வகித்தார். பொருளாளர் கந்தசாமி, துணைத் தலைவர் இளங்கோ முன்னிலை வகித்தனர். அனைத்து வணிகர் சங்க கூட்டமைப்பு தலைவர் சிவனேசன், மில் ஜவுளி வியாபாரிகள் சங்க தலைவர் மகாதேவன் மற்றும் வணிகர்கள் பலர் கலந்துகொண்டனர்.