/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/வாழை வரத்துக்குறைவு விலை திடீர் அதிகரிப்புவாழை வரத்துக்குறைவு விலை திடீர் அதிகரிப்பு
வாழை வரத்துக்குறைவு விலை திடீர் அதிகரிப்பு
வாழை வரத்துக்குறைவு விலை திடீர் அதிகரிப்பு
வாழை வரத்துக்குறைவு விலை திடீர் அதிகரிப்பு
ADDED : ஜூலை 15, 2011 12:40 AM
கோபிசெட்டிபாளையம்: கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடப்பு வாரம் வாழை வரத்து குறைந்தும், சென்ற வாரத்தை காட்டிலும் விலை அதிகரித்தது.
கோபி சுற்று வட்டார பகுதியில் உற்பத்தியாகும் வாழைப்பழங்கள், கோபி வேளாண்மை உற்பத்தி விற்பனையாளர் சங்கத்தில் ஏலம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. நடப்பு வாரம் 2,500 வாழைத்தார்கள் விற்பனைக்கு வந்தன. இதில், கதளி கிலோ 25 ரூபாய், நேந்திரம் கிலோ 18 ரூபாய், செவ்வாழை தார் 600 ரூபாய், தேன் வாழை 340 ரூபாய், ரொபஸ்ட்ரா 250 ரூபாய், பூவாழை 260 ரூபாய், மொத்தன் 220 ரூபாய், பச்சை நாதன் 235 ரூபாய் விற்கப்பட்டது. சென்ற வாரத்தை விட வாழை வரத்து குறைந்து இருந்தது. சென்ற வாரத்தை விட விலை அதிகரித்து காணப்பட்டது. மொத்தம் 2.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான வாழை விற்பனை செய்யப்பட்டது.