/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ஈரோட்டில் பெருகும் எலித்தொல்லை: மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?ஈரோட்டில் பெருகும் எலித்தொல்லை: மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?
ஈரோட்டில் பெருகும் எலித்தொல்லை: மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?
ஈரோட்டில் பெருகும் எலித்தொல்லை: மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?
ஈரோட்டில் பெருகும் எலித்தொல்லை: மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?
ADDED : ஜூலை 15, 2011 12:38 AM
ஈரோடு: ஈரோடு மாநகரில் நாயை மிஞ்சும் அளவுக்கு எலித் தொல்லை பெருகிறது.
ஈரோட்டில் பிரப் ரோடு, ஈஸ்வரன் கோவில் வீதி, நேதாஜி ரோடு, ஆர்.கே.வி.ரோடு, மணிக்கூண்டு, மேட்டூர் ரோடு, வீரப்பன்சத்திரம், சூரம்பட்டி, ரயில்வே ஸ்டேஷன் உள்பட மாநகரப் பகுதியில் ஏராளமான ஜவுளி உள்ளிட்ட வியாபார நிறுவனங்கள், ஹோட்டல், டீ கடைகள் உள்ளன. எப்போதும் மக்கள் கூட்டத்துடன் காணப்படும் இப்பகுதிகளில் சாலையோரம் உள்ள சாக்கடைகள் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை. சாதாரண சாக்கடை விரிவாக்கம், பாதாள சாக்கடைப் பணிக்காக ஆங்காங்கே குழி, பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளன. ஏற்கனவே, ஈரோடு மாநகர தெருக்கள் எலிகளின் புகலிடமாக உள்ளது. இந்நிலையில், சாக்கடைகளும் பராமரிப்பின்றி கிடப்பதால், அவற்றில் எலிகள் சுதந்திரமாக குட்டிபோட்டு வாழ்க்கை நடத்த துவங்கிவிட்டன. மாலை 7 மணிக்கு மேல் வியாபார, வர்த்தக நிறுவனங்களுக்குள் புகுந்து தங்கள் கைவரிசையை காட்டுகின்றன. பில்டிங்கில் சிறிய ஓட்டை கிடைத்தாலும், சாக்கடையோரம் இருந்து உள்ளே நுழைந்துவிடுகின்றன. இதில், சாக்கடையோரம் உள்ள ஹோட்டல்களிலும் எலிகள் எளிதில் புகுந்துவிடுகின்றன. அங்கு இரவு நேரத்தில் சமையலறையில் ஆட்கள் நடமாட்டம் குறைவாக இருக்கும் போது, உணவுப்பொருட்களிலும் வாயை வைத்துவிடுகின்றன. சுகாதாரத் தன்மை பாதிக்கப்படுகிறது. உணவை சாப்பிடுவோருக்கு நோயை ஏற்படுத்தும் அபாயமும் உள்ளது. மாநகரில் எங்கு பார்த்தாலும் நாய்த் தொல்லை அதிகரித்துள்ள வேளையில், எலித் தொல்லையும் பெருகுகிறது. இவற்றின் மீதும் மாநகராட்சி சுகாதரப் பிரிவு சிறப்பு கவனம் செலுத்தி எலியை அழிக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து எலியின் தங்குமிடமான சாலையோர சாக்கடை பழுதை நீக்கி, தொடர்ந்து சுத்தமாக மருந்து தெளித்து பராமரிக்க வேண்டும்.