/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/கனி மார்க்கெட்டில் பாழடைந்த கட்டிடம் :இடித்து அப்புறப்படுத்த மாநகராட்சி முடிவுகனி மார்க்கெட்டில் பாழடைந்த கட்டிடம் :இடித்து அப்புறப்படுத்த மாநகராட்சி முடிவு
கனி மார்க்கெட்டில் பாழடைந்த கட்டிடம் :இடித்து அப்புறப்படுத்த மாநகராட்சி முடிவு
கனி மார்க்கெட்டில் பாழடைந்த கட்டிடம் :இடித்து அப்புறப்படுத்த மாநகராட்சி முடிவு
கனி மார்க்கெட்டில் பாழடைந்த கட்டிடம் :இடித்து அப்புறப்படுத்த மாநகராட்சி முடிவு
ADDED : ஜூலை 15, 2011 12:37 AM
ஈரோடு: கனி மார்க்கெட்டில் பாழடைந்து கிடக்கும் 72 கடைகளுக்கான கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
ஈரோட்டில் புகழ் வாய்ந்த கனி மார்க்கெட் ஆறு ஏக்கர் பரப்பளவில் விரிந்து கிடக்கிறது. அங்கு, தினசரி சந்தை, வாரச்சந்தை நடக்கிறது. 850 கடைகள் உள்ளன. தினமும், உள்ளாடைகள், வேட்டி, சட்டைகள், பேண்ட், சுடிதார், சேலைகள், லுங்கி உள்ளிட்ட ஜவுளி ரகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. வாரந்தோறும் திங்கட்கிழமை இரவு முதல் புதன்கிழமை மாலை வரை ஜவுளி சந்தை கூடுவது வழக்கம். வாரச்சந்தையில் ஒரிஸா, கேரளா, கர்நாடகா, மகராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் குவிந்து, துணிகளை வாங்கி செல்கின்றனர். ஈரோடு கனி மார்க்கெட் வாரச்சந்தையில் அனைத்து விதமான துணி ரகங்களும் குறைந்த விலையில் கிடைப்பதால், வெளி மாநில வியாபாரிகள், பொதுமக்கள் மத்தியில் தனிமவுசு உள்ளது. வாரந்தோறும் கனி மார்க்கெட்டில் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட துணி வகைகள் விற்பனையாகி வருகின்றன. இந்நிலையில், கனி மார்க்கெட் பின்புறம் 72 கடைகள் கட்டப்பட்டிருந்த கட்டிடம் பாழடைந்து போனது. அக்கட்டிடத்தின் சுவர்கள் எல்லாம் சேதமடைந்து விட்டன. மேலே போடப்பட்ட தார்சும் பெயர்ந்து, எப்போது இடிந்து விழுமோ என்ற நிலை உள்ளது. அந்த இடத்தில் தினமும் இரவு நேரங்களில் மர்ம நபர்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. கஞ்சா, பிராந்தி என்று போதைவாசிகளின் கூடாரமாக உள்ளது. மாமூல் வசூலிக்கும் கும்பல்கள் அங்கிருந்து மிரட்டுவதால், வியாபாரிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். மர்மநபர்களின் மிரட்டலுக்கு பயந்து பல வியாபாரிகள் அங்கு கடை போட வருவதில்லை. ஈரோடு மாநகராட்சி சார்பில் கட்டிடத்தின் உறுதி தன்மை குறித்து ஆய்வு நடந்தது. அதில், கட்டிடம் மிகவும் சேதமடைந்துள்ளதால், இடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் ஆலோசனை அளித்தனர். அதன்படி, கட்டிடம் பாதுகாப்பாக இடித்து அப்புறப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். விரைவில், 72 கடைகள் உள்ள அக்கட்டிடம் இடிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட உள்ளது.