ADDED : ஜூலை 14, 2011 03:26 PM
பெரம்பலூர்: தடையில்லா சான்றிதழ் வழங்க ரூ.
ஆயிரம் லஞ்சம் கேட்ட பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி., அலுவலக இளநிலை உதவியாளர் கைது செய்யப்பட்டார். பெரம்பலூர் மாவட்டம் சிறுகுடல் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து இவரது மகன் மணி (24). கேட்டரிங் மாணவர். இவர் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்ல தடையில்லா சான்று கோரி, பெரம்பலூர் எஸ்.பி., அலுவலக பாஸ்போர்ட் பிரிவு இளநிலை உதவியாளர் நல்லுசாமியை அணுகியுள்ளார். இதற்கு ரூ. ஆயிரம் லஞ்சமாக கேட்டதால், நல்லுசாமி மீது திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசில் மணி புகார் செய்தார். இதையடுத்து போலீசார் நல்லுசாமியை கைது செய்தனர்.