Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/போரூர் பாலப்பணிக்காக வணிக வளாக கட்டடம் தரைமட்டம்

போரூர் பாலப்பணிக்காக வணிக வளாக கட்டடம் தரைமட்டம்

போரூர் பாலப்பணிக்காக வணிக வளாக கட்டடம் தரைமட்டம்

போரூர் பாலப்பணிக்காக வணிக வளாக கட்டடம் தரைமட்டம்

ADDED : ஜூலை 13, 2011 05:05 AM


Google News
போரூர்:பாலம் கட்டுமானப் பணிக்காக, போரூர் சந்திப்பில் வணிக வளாகங்கள், அடுக்குமாடி வீடுகள் அதிரடியாக இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. இதனால்,போரூர் பகுதி சந்திப்பில் வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.மவுன்ட் பூந்தமல்லி, ஆற்காடு ரோடு, குன்றத்தூர் பிரதான சாலை, டிரங்க் ரோடு ஆகியவை சந்திக்கும் போரூர் சந்திப்பில், 34 கோடியே 72 லட்சம் ரூபாயய்செலவில் 480 மீட்டர் நீளமும், 37.2 மீட்டர் அகலமும் கொண்ட பாலம் 18 மாதத்தில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டது.

2010ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பாலம் கட்டுமானப் பணி துவங்கியது.ஒன்றரை ஆண்டு தாண்டியும் 14 தூண்களுக்கு, இதுவரை ஐந்து தூண்கள் மட்டுமே எழுப்பப்பட்டன. பின், நிலம் கையகப்படுத்துவது குறித்து நெடுஞ்சாலைத்துறை மற்றும் பூந்தமல்லி வட்டாட்சியர் அலுவலர்களிடையே, ஒருங்கிணைப்பு இல்லாததால் பாலம் கட்டுமான பணி மந்தகதியில் நடந்தது. பல கட்டபேச்சுவார்த்தைக்கு பின், பாலம் கட்டுவதற்கான இடத்தில், பட்டா மற்றும் கிராம நத்தம் ஆகிய பகுதிகள் வருவது கணக்கிடப்பட்டு, 19 கோடியே 7 லட்சம் ரூபாயய்ஒதுக்கீடு செ#யப்பட்டது.முதல்கட்டமாக, பட்டாவில் இருக்கும் வணிக வளாகங்கள் மற்றும் கடைக்காரர்களின் உரிமையாளர்கள் 71 பேருக்கு நஷ்டஈடு கொடுக்கப்பட்டது. இதில், ஒரு சில கடைகளுக்கு நஷ்டஈடு போய்சேரவில்லை. ஆனால், அனைத்து தரப்பினரும் காலி செ#யும்படி நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டது. நஷ்ட ஈடு பெறாத கடைக்காரர்கள் காலி செ#யாததால் பரபரப்பு ஏற்பட்டது.

இரண்டு மாத இடைவெளிக்கு பின் நேற்று ஜே.சி.பி., உதவியுடன் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் போரூர் சந்திப்பில் உள்ள வணிக வளாகங்கள், கடைகளை போலீஸ் பாதுகாப்புடன் அதிரடியாக அகற்றினர்.ஏற்கனவே, போரூர் சந்திப்பில் பாலம் கட்டுமான பணி துவங்கியதால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தினமும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். இதில், பீக்- அவரில் ஜே.சி.பி.யை பயன்படுத்தி சாலையோர கடைகளை, நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் அகற்றியதால் போரூர் சந்திப்பில்,போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

கிண்டியிலிருந்து பூந்தமல்லிக்கு செல்லும் சாலையில் ஒருமணிநேரத்திற்கும் அதிகமாக வாகனங்கள் காத்திருந்தன. எனவே, விடியற்காலை முதல் சாலையோர கட்டடங்களை அகற்ற நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது சற்று குறையலாம்.இது குறித்து சென்னை பெருநகர் நெடுஞ்சாலைத்துறை அதிகாரி,''பட்டா இடத்தில் உள்ள கட்டடங்கள் இடிக்கப்பட்டு வருகிறது. நாளை முதல்(இன்று) ஜே.சி.பி.,க்களை அதிகளவு கொண்டு இரண்டு மற்றும் மூன்று மாடி கட்டடங்களை இடிக்கப்போகிறோம். இப்பணி ஒருவாரத்தில் முடிந்துவிடும்'' என்றார்.

நடிகர் விஜயய்திருமண மண்டபம் இடிப்பா?

குன்றத்தூர் சாலையில் நடிகர் விஜயின் திருமண மண்டபம் மற்றும் பல மண்டபங்கள் உள்ளன. போரூர் பாலம் கட்டுவதற்காக, அடுக்கு மாடி வீடுகள், வணிக வளாகங்கள் நேற்று அதிரடியாக இடிக்கப்பட்டன. இதில், குன்றத்தூர் சாலையில் உள்ள நடிகர் விஜயய்திருமண மண்டபத்தின் காம்பவுண்டு சுவர் மாலையில் இடிக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், நேற்று மாலை வரை விஜயய்மண்டபத்தின் காம்பவுண்டு சுவர் இடிக்கப்படவில்லை. இதனால், விஜயய்ரசிகர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us