Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவாரூர்/வாலிபர் கொலை வழக்கில் மூவர் கைது

வாலிபர் கொலை வழக்கில் மூவர் கைது

வாலிபர் கொலை வழக்கில் மூவர் கைது

வாலிபர் கொலை வழக்கில் மூவர் கைது

ADDED : ஜூலை 13, 2011 02:32 AM


Google News

திருவாரூர்: திருவாரூர் வாலிபர் கொலை வழக்கில், மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருவாரூர் மாவட்டம், பேரளம் அருகே கருவங்குடியை சேர்ந்த தங்கவேல் மகன் சாமிநாதன்(42). இவருக்கும், அதே ஊரை சேர்ந்த சித்திரை செல்வம் என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்தது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன், கொல்லுமாங்குடி கடைத்தெருவில், சாமிநாதன் மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக, சித்திரைசெல்வம், இளஞ்செழியன், கார்த்திக் ஆகிய மூவரும், கடந்த 11ம் தேதி நாகப்பட்டினம் நீதிமன்றத்தில் ஆஜராகினர். இந்நிலையில், நேற்று, பேரளம் போலீஸார் காளீஸ்வரன், வரதன், பிரகாஷ் ஆகிய மூவரை கைது செய்துள்ளனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us