/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/சண்டையை தடுக்க வந்தவரை கொலை செய்தவருக்கு ஆயுள்சண்டையை தடுக்க வந்தவரை கொலை செய்தவருக்கு ஆயுள்
சண்டையை தடுக்க வந்தவரை கொலை செய்தவருக்கு ஆயுள்
சண்டையை தடுக்க வந்தவரை கொலை செய்தவருக்கு ஆயுள்
சண்டையை தடுக்க வந்தவரை கொலை செய்தவருக்கு ஆயுள்
ADDED : ஜூலை 13, 2011 02:31 AM
ராமநாதபுரம் : சாயல்குடி அருகே இருவரிடையே ஏற்பட்ட சண்டையை தடுக்க வந்தவரை
கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.கன்னிராஜபுரத்தை சேர்ந்த
திருமணிசெல்வம்(22).
இவர் இதே பகுதியில் பெட்டிக்கடை நடத்திவருகிறார்.
கடந்த 2009 பிப்.,1ல் இதே ஊரை சேர்ந்த ராஜேஷ்குமார்(26) தனது புறாவை
திருடிவிட்டதாக கூறி திருமணிசெல்வம் மீது புகார் கூறினார். இது தொடர்பாக
இருதரப்பினர் மோதிக் கொண்டனர். இதை தடுக்க வந்த திருமணிசெல்வத்தின் சகோதரர்
ஆத்திமுத்து(26)வின் நெஞ்சில் ராஜேஷ்குமார், வேல்கம்பால் குத்தியதில் அதே
இடத்தில் பலியானார். இவ்வழக்கில், ராஜேஷ்குமாருக்கு ஆயுள் தண்டனை, விதித்து
மாவட்ட நீதிபதி பாலசுந்தரகுமார் தீர்ப்பளித்தார்.


