உளுந்தூர்பேட்டை பெருமாள் கோவிலில் பூட்டை உடைத்து ஐம்பொன் சிலைகள் திருட்டு
உளுந்தூர்பேட்டை பெருமாள் கோவிலில் பூட்டை உடைத்து ஐம்பொன் சிலைகள் திருட்டு
உளுந்தூர்பேட்டை பெருமாள் கோவிலில் பூட்டை உடைத்து ஐம்பொன் சிலைகள் திருட்டு
உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டை ஆதிகேசவ பெருமாள் கோவிலின் பூட்டை உடைத்து, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள, ஆறு ஐம்பொன் சிலைகள் கொள்ளை அடிக்கப்பட்டது.
தகவலறிந்த முக்கியஸ்தர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, கோவிலில் இருந்த பழமை வாய்ந்த கிரியம்மன் சிலை, பெருமாள் சிலை, ஸ்ரீதேவி, பூதேவி, அனுமார், நவநீதகிருஷ்ணன் ஆகிய ஆறு ஐம்பொன் சிலைகளை மர்ம கும்பல் கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்தது. பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள சிலைகள் ஒவ்வொன்றும் இரண்டரை அடி உயரமும், தலா 50 கிலோ எடையிலும் இருந்தன. மோப்ப நாய் துப்பறியாமல் இருக்க மர்ம நபர்கள், கோவிலைச் சுற்றி மிளகாய் தூளைத் தூவியுள்ளனர். கோவில் பின் பகுதியில் கற்களை அடுக்கி சுவர் ஏறி குதித்துள்ளனர். உளுந்தூர்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர் வெங்கடாஜலம், தடயங்களை சேகரித்தார். மோப்ப நாய் மிஷ்டி வரவழைக்கப்பட்டு கோவிலில் இருந்து வேன் ஸ்டேண்ட் வரை சென்று நின்றுவிட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.