/உள்ளூர் செய்திகள்/திருச்சி/குறைதீர் கூட்டத்தில் இலவச பட்டா மனுக்கள் குவிந்தன : முதியோர் உதவித்தொகை கேட்டு மனுகுறைதீர் கூட்டத்தில் இலவச பட்டா மனுக்கள் குவிந்தன : முதியோர் உதவித்தொகை கேட்டு மனு
குறைதீர் கூட்டத்தில் இலவச பட்டா மனுக்கள் குவிந்தன : முதியோர் உதவித்தொகை கேட்டு மனு
குறைதீர் கூட்டத்தில் இலவச பட்டா மனுக்கள் குவிந்தன : முதியோர் உதவித்தொகை கேட்டு மனு
குறைதீர் கூட்டத்தில் இலவச பட்டா மனுக்கள் குவிந்தன : முதியோர் உதவித்தொகை கேட்டு மனு
UPDATED : ஜூலை 12, 2011 05:54 PM
ADDED : ஜூலை 12, 2011 12:20 AM
திருச்சி: திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் பட்டா கோரியும், முதியோர் உதவித் தொகை கேட்டும் ஏராளமான மனுக்கள் நேற்று குவிந்தன.
திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் முகாம் நேற்று நடந்தது. திருச்சி கலெக்டர் ஜெயஸ்ரீமுரளிதரன் மனுக்களை பெற்றுக் கொண்டிருந்தார். ஆசிரியர் பயிற்சி கலந்தாய்வுக்கு செல்ல வேண்டியதிலிருந்ததால் 11.30 மணிக்கெல்லாம் புறப்பட்டார். அதைத் தொடர்ந்து டி.ஆர்.ஓ., பேச்சியம்மாள் மனுக்களை பெற்றுக் கொண்டார். ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட அல்லித்துறை கிராம மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: அல்லித்துறை கிõரமத்தில் உள்ள வளையல்காரத் தெரு, சிவன்கோவில் தெரு, காமாட்சியம்மன் கோவில் தெரு, பூக்கொல்லை தெரு, விநாயகர் கோவில் தெரு ஆகிய இடத்தில் குடிசை மற்றும் ஓட்டு வீடு கட்டி சுமார் 900 குடும்பங்கள் வசித்து வருகின்றன. நாங்கள் பலதரப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தினக்கூலிகள். பல தலைமுறையாக இங்கு வாழ்ந்து வருகிறோம். வீட்டு வரி தண்ணீர் வரி, மின் கட்டணம் முறையாக செலுத்துகிறோம். ரேஷன் கார்டு உள்ளது. நாங்கள் வசிக்கும் இடம் பார்வதீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடம் மற்றும் நத்தம் புறம்போக்கு பகுதி. கோவிலில் அர்ச்சனை செய்யும் சுந்தரேச குருக்கள் மகன் குணசேகரன் என்பவர் நான் தான் பரம்பரை அறங்காவலர் என்று கூறி எங்களை மிரட்டி தரைவாடகை வசூலிக்கிறார். ரசீது எதுவும் கொடுப்பதில்லை. வீட்டு வாடகை தர மறுப்பவர்களை வீட்டை காலி செய்து மனையை என்னிடம் ஒப்டைத்துவிடுங்கள் என்று மிரட்டுகிறார். இதனால், நாங்கள் அனைவரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். குணசேகரன் மீது நடவடிக்கை எடுத்து, கோவில் சொத்துக்களை பாதுகாக்க வேண்டும். தலைமுறையாக குடியிருக்கும் எங்களுக்கு பட்டா வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொன்மலை பகுதி செயலாளர் கார்த்திகேயன் தலைமையில், பொதுமக்கள் அளித்த மனுவில், ''7, 28வது வார்டு பகுதியை சேர்ந்த நேருஜிநகர், சீனிவாசநகர், அம்மாகுளம், பாராதியார் தெரு புறம்போக்கு இடத்தில் பல ஆண்டாக குடியிருக்கும் மக்களுக்கு இதுவரை பட்டா வழங்கவில்லை. உடனடியாக இலவச பட்டா வழங்க வேண்டும்,'' என கூறப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் இலவச பட்டா கோரியும், முதியோர் உதவித்தொகை வழங்கக்கோரியும் ஏராளமானோர் நேற்று மனு அளித்தனர். கடந்த வாரத்தை காட்டிலும் கூட்டம் குறைவாக இருந்தது. தனித்தனி கழிவறை கலெக்டர் கவனிப்பாரா? ஒரே நாளில் ஆயிரக்கணக்கான மக்கள் வரும் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் பயன்படுத்துவதுக்காக தனியாக கழிவறை இல்லை. இதை சமாளிக்கவே வாரம்தோறும் மாநகராட்சியின் நடமாடும் கழிவறை பயன்படுத்தப்படுகிறது. அதில் வெறும் பத்து எண்ணிக்கையிலான கழிவறைகள் மட்டுமே உள்ளன. ஆண், பெண் என தனித்தனியாக இல்லை. இதனால், இந்த நடமாடும் கழிவறையை இருபாலரும் பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. முதியோர், ஊனமுற்றோர் இதை பயன்படுத்த முடியவில்லை. கூடுதல் நிழல்குடை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ள திருச்சி கலெக்டர் ஜெயஸ்ரீமுரளிதரன் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில், கூடுதல் கழிவறை கட்டவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. அதேபோல், திருநங்கைகளுக்கும் தனியாக கழிவறை கட்டினால், பிற மாவட்டங்களுக்கு முன்னுதாரணமாக திருச்சி அமையும்.