/உள்ளூர் செய்திகள்/கரூர்/நகராட்சி எல்லையை விரிவுபடுத்துவதில் சிக்கல்?கவுன்சிலர் எதிர்ப்பால் நகராட்சி கூட்டம் தள்ளிவைப்புநகராட்சி எல்லையை விரிவுபடுத்துவதில் சிக்கல்?கவுன்சிலர் எதிர்ப்பால் நகராட்சி கூட்டம் தள்ளிவைப்பு
நகராட்சி எல்லையை விரிவுபடுத்துவதில் சிக்கல்?கவுன்சிலர் எதிர்ப்பால் நகராட்சி கூட்டம் தள்ளிவைப்பு
நகராட்சி எல்லையை விரிவுபடுத்துவதில் சிக்கல்?கவுன்சிலர் எதிர்ப்பால் நகராட்சி கூட்டம் தள்ளிவைப்பு
நகராட்சி எல்லையை விரிவுபடுத்துவதில் சிக்கல்?கவுன்சிலர் எதிர்ப்பால் நகராட்சி கூட்டம் தள்ளிவைப்பு
ADDED : ஜூலை 12, 2011 12:18 AM
கரூர்: கரூர் நகராட்சி கூட்டம் நேற்று காலை 11 மணிக்கு நடந்தது. சேர்மன்
சிவகாமசுந்தரி தலைமை வகித்தார். துணைத்தலைவர் கனகராஜ், கமிஷனர்
ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கரூர் நகராட்சியுடன்
இனாம் கரூர் நகராட்சி, தாந்தோணி நகராட்சி, சணப்பிரட்டி பஞ்சாயத்து ஆகிய
பகுதிகளையும் கரூர் நகராட்சியுடன் இணைப்பது குறித்து கவுன்சிலர்களிடம்
ஒப்புதல் பெறுவது குறித்து கூட்டத்தை கூட்டியுள்ளதாக தலைவர் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட கவுன்சிலர் மணிராஜ்(தி.மு.க), கடந்த முø ற கூட்டம்
நடந்த போது, ''அடுத்த கூட்டம் புதிய கட்டடத்தில் நடக்கும் என்றீர்கள்,
மீண்டும் பழைய கட்டடத்திலேயே நடக்கிறதே?. எப்போது புதிய கட்டடத்தில்
கூட்டம் நடத்தப்படும்,'' என்றார். சேர்மன்: அவசர கூட்டம் என்பதாலும்,
புதிதாக கமிஷனர் வந்துள்ளார். மற்ற நகராட்சிகள் நமது நகரா ட்சியுடன்
இணைப்பு குறித்து அவசரமாக விவாதிக்க வேண்டியதுள்ளதால் இங்கு கூட்டத்தை
வைத்து விட்டேன். அடுத்த கூட்டம் புதிய கட்டிடத்தில் நடக்கும்'' என்றார்.
முத்துசாமி(அ.தி.மு.க.,): நடக்கும்...நடக்கும் என கூறினார். இவரது பதிலால்
ஆவேசமடைந்த தி.மு.க.,கவுன்சிலர்கள் முத்துசாமிக்கு எதிராக சத்தம் போட்டனர்.
இதில் சிறிது நேரம் இரு தரப்பினரும் ஆவேசமாக பேசிக்கொண்டனர். இரு
தரப்பினரையும் மற்ற கவுன்சிலர்கள் சமாதானப்படுத்தினர்.
தலைவர்: ''கரூர் நகராட்சியுடன் இனாம் கரூர், தாந்தோணி நகராட்சிகள்,
சணப்பட்டி பஞ்சாயத்து இணைய உள்ளது. இதுகுறித்து ஒப்புதல் அளித்து அரசுக்கு
மன்றம் தீர்மானம் அனுப்ப வேண்டும். ஆகவே, தீர்மானத்தை நிறைவேற்ற ஒத்துழைக்க
வேண்டும். '' என்றார். பாலகுரு(தி.மு.க): இந்த பணிகள் எல்லாம் எப்போது
நடந்தது. இப்போது தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்றால் முடியாது. கால
அவகாசம் வேண்டும். அடுத்த வாரம் முடிவு செய்து கொள்ளலாம். சேர்மன்
சிவகாமசுந்தரி, கவுன்சிலர் மணிராஜை நோக்கி அண்ணா நீங்கள் சொல்லுங்கள்.
எப்போது கூட்டத்தை வைத்துக் கொள்ளலாம்... சொல்லுங்கள் என்றார்.
பாலகுரு:'புதன்கிழமை கூட்டத் தை தள்ளி வையுங்கள் இல்லையெ ன்றால்...
நாளைக்கு கூட்டத்தை தள் ளி வைத்தால் வைத்துக்கொள்ளுங்க ள். பார்த்துக்
கொள்கிறேன்,'என்றார். கரூர் நகராட்சி யில் 36 வார்டுகள் இருந்தது. தற்போது
18 வார்டாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு அரசால் மேற்கொள்ளப்பட்டு,
தமிழகமெங்கும் வார்டுகள் குறைக்கப்பட்டுள்ளது, அரசிதழிலும்
வெளியிடப்பட்டுள்ளது. கவுன்சிலர்கள் எதிர்த்தாலும், இந்த நடவடிக்கை
தொடரும். கவுன்சிலர்கள் தங்கள் எதிர்ப்பை வேண்டுமானால் பதிவு செய்ய
முடியுமே தவிர அரசின் முடிவை மாற்ற வாய்ப்பில்லை. வரும் 13ம் தேதிக்குள்
உள்ளாட்சி அமைப்புகள் அனைத்தும் ஒப்புதல் அளித்து தீர்மானம் நிறைவேற்றி
அனுப்ப வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடதக்கது. கரூரில்
மட்டும் கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு நடப்பதாக தலைவர் அறிவித்தார்.
கவுன்சிலர்கள் கூட்டத்தை தள்ளி வைக்க வேண்டும் என்பதாலேயே கூட்டம் தள்ளி
வைக்கப்பட்டுள்ளது. தாந்தோணி நகராட்சி கூட்டம் சேர்மன் ரேவதி தலைமையில்
நடந்தது. இங்கு 18 கவுன்சிலர்களில் ஒருவர் தவிர மற்ற 17 கவுன்சிலர்கள்
கலந்து கொண்டு, கரூர் நகராட்சியுடன் தாந்தோணி நகராட்சி இணைவதற்கு ஒப்புதல்
அளித்து தீர்மானம் நிறைவேற்றினர். தாந்தோணி நகராட்சியில் 18 வார்டுகள்
இருந்த நிலையில், மறு சீரமைப்பில் 12 வார்டாக குறைக்கப்பட்டுள்ள போதும்,
கவுன்சிலர்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்க வில்லை.