Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/பள்ளி மாணவர்களை அழைத்து வந்த 15 வயது சிறுவனின் கார் பறிமுதல்

பள்ளி மாணவர்களை அழைத்து வந்த 15 வயது சிறுவனின் கார் பறிமுதல்

பள்ளி மாணவர்களை அழைத்து வந்த 15 வயது சிறுவனின் கார் பறிமுதல்

பள்ளி மாணவர்களை அழைத்து வந்த 15 வயது சிறுவனின் கார் பறிமுதல்

ADDED : ஜூலை 12, 2011 12:16 AM


Google News

மதுரை : மதுரையில் பள்ளி மாணவர்களை காரில் அழைத்து வந்த 15 வயது சிறுவனின் காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுபோன்று மாணவர்களை அழைத்து வருவதை ஆதரிக்கக்கூடாது என பள்ளி நிர்வாகத்தை எச்சரித்தனர்.

சில நாட்களாக பள்ளி வாகனங்களையும், பள்ளிக்கு மாணவர்களை அழைத்து வரும் வாகனங்களையும் ஆர்.டி.ஓ., அதிகாரிகளும், போலீசாரும் ஆய்வு செய்து வருகின்றனர். நேற்று காலை தனியார் பள்ளி முன் தல்லாகுளம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் திருமலைக்குமார் மற்றும் போலீசார் ஆய்வில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மாருதி ஆம்னி காரில் ஆறு மாணவர்களை அழைத்துக் கொண்டு, மூன்று மாவடியைச் சேர்ந்த அருண்குமார்(15) என்பவர் வந்தார். அதிர்ச்சியடைந்த போலீசார், அவரை கண்டித்ததோடு, காரையும் பறிமுதல் செய்து, வடக்கு ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ஒப்படைத்தனர். பின், பள்ளி நிர்வாகத்திடம், 'இதுபோன்று டிரைவிங் லைசென்ஸ் பெற தகுதி இல்லாதவர்கள், மாணவர்களை காரில் அழைத்து வந்தால் அதை அனுமதிக்கக்கூடாது. அதுகுறித்து எங்களுக்கு தகவல் தெரிவியுங்கள். இல்லாதபட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என எச்சரித்தனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us