/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ரேஷன் கடையை திறக்கவிடாமல் தடுக்கும் ஊராட்சி தலைவர்ரேஷன் கடையை திறக்கவிடாமல் தடுக்கும் ஊராட்சி தலைவர்
ரேஷன் கடையை திறக்கவிடாமல் தடுக்கும் ஊராட்சி தலைவர்
ரேஷன் கடையை திறக்கவிடாமல் தடுக்கும் ஊராட்சி தலைவர்
ரேஷன் கடையை திறக்கவிடாமல் தடுக்கும் ஊராட்சி தலைவர்
ADDED : ஜூலை 11, 2011 10:45 PM
ராமநாதபுரம் : ரேஷன் கடையை திறக்க விடாமல் விற்பனையாளரை மிரட்டி வரும், ஊராட்சி தலைவர் மீது போலீசில் புகார் செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பேராவூரில் உள்ள ரேஷன் கடையில் பெருவயல் கலையனூரை சேர்ந்த பூங்கோதை விற்பனையாளராக உள்ளார். பேராவூர் ஊராட்சி தலைவராக இருக்கும் முருகேசன், தனது மைத்துனர் முத்துக்கூரி இல்லாமல் கடையை திறக்க கூடாது என மிரட்டியுள்ளார். முத்துக்கூரி, தான் சொல்லும் நபர்களுக்குத்தான் இலசவ அரிசி, சீனி வழங்க வேண்டும் என, மிரட்டியுள்ளார். இந்நிலையில் கடந்த 8ம் தேதி கடையை திறக்க சென்ற, பூங்கோதையை கடையை திறக்கவிடாமல் முத்துக்கூரி, அவரது உறவினர் போஸ் ஆகியோர் அடித்துள்ளனர். இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு கேணிக்கரை போலீசில் புகார் செய்துள்ளார். இப்பிரச்னையால் தற்போது ரேஷன் கடை திறக்கப்படவில்லை. விற்பனையாளர் பூங்கோதை கூறும்போது: பேராவூர் ஊராட்சி தலைவர் முருகேசன், அவரது மைத்துனர் முத்துக்கூரி கடை சாவியை கேட்டு மிரட்டுகின்றனர், என்றார்.