/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/தலித் காலனி ஆக்கிரமிப்புகள் : கணக்கெடுப்பு துவக்கம்தலித் காலனி ஆக்கிரமிப்புகள் : கணக்கெடுப்பு துவக்கம்
தலித் காலனி ஆக்கிரமிப்புகள் : கணக்கெடுப்பு துவக்கம்
தலித் காலனி ஆக்கிரமிப்புகள் : கணக்கெடுப்பு துவக்கம்
தலித் காலனி ஆக்கிரமிப்புகள் : கணக்கெடுப்பு துவக்கம்
ADDED : ஜூலை 11, 2011 10:42 PM
பழநி : ஆதிதிராவிடர் காலனிகளில் ஆக்கிரமிப்பு குறித்த விபரங்களை வருவாய் துறையினர் சேகரித்து வருகின்றனர்.
ஆதிதிராவிட மக்களுக்கு இலவச நிலம், குடியிருப்புகள் அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளன.
ஒரே இடத்தில் குழுவாக வசித்த பகுதிகள், அரசு ஆவணங்களில் ஆதிதிராவிட காலனிகளாக குறிப்பிடப்பட்டுள்ளன. இப்பகுதியில் கடந்த காலங்களில், செல்வாக்குள்ள நபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இவற்றை மீட்டு, உரியவர்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள, அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்காக ஆதிதிராவிடர் காலனி பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்த கணக்கெடுப்பில், வருவாய் துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காலனி உள்ள கிராமத்தின் பெயர், குடியிருப்போர் எண்ணிக்கை, மொத்த பரப்பு, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள பரப்பு, ஆக்கிரமிப்பின் தன்மை (குடியிருப்பு, வணிக நிறுவனம், விவசாயப் பணி), உரிமையாளர் பெயர், ஆக்கிரமிப்பு செய்துள்ளவர் பெயர் குறித்த விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன. இது தவிர இப்பகுதியில் உள்ள நடைபாதை, ரோட்டோர, புறம்போக்கு நிலப் பரப்பின் ஆக்கிரமிப்பு விபரங்களும் சேகரிக்கப்படுகின்றன.