ADDED : ஜூலை 11, 2011 10:42 PM
வேடசந்தூர் : கரூர்- திண்டுக்கல் நெடுஞ்சாலையில் வேடசந்தூருக்கு வெளியே 2 கி.மீ., ல், பை பாஸ் ரோடு பிரிந்து செல்கிறது.
இதே போல வேடசந்தூரிலிருந்து செல்லும் இணைப்பு ரோடு, திண்டுக்கல் ரோட்டில் இணைகிறது. இந்த இரு இடங்களும் ஆபத்து நிறைந்தது. கருக்காம்பட்டி அருகே வேடசந்தூர் பிரியும் ரோட்டிற்கு, இணைப்பு இல்லை. பழைய ரோட்டை அப்படியே விட்டு விட்டனர். இதனால் வேடசந்தூர்- கரூருக்கு ஒரே ரோட்டில் செல்ல வேண்டும். இந்த இடத்தில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. லட்சுமணம்பட்டி அருகே வேடசந்தூர் பிரிவு நான்கு வழிச்சாலையில் நடுவில் நடப்பட்ட செடிகள் வளர்ந்து, எதிர் திசையில் வருபவர்களுக்கு பார்வையை மறைக்கிறது. விபத்துக்களை குறைக்க, இக்குறைகளை களைய வேண்டும்.