/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/வட்டிக்காரர்களின் தொல்லை கையெழுத்தால் "தலையெழுத்து' மாறும் அவலம்:நுகர்வோர் அமைப்பு புகார்வட்டிக்காரர்களின் தொல்லை கையெழுத்தால் "தலையெழுத்து' மாறும் அவலம்:நுகர்வோர் அமைப்பு புகார்
வட்டிக்காரர்களின் தொல்லை கையெழுத்தால் "தலையெழுத்து' மாறும் அவலம்:நுகர்வோர் அமைப்பு புகார்
வட்டிக்காரர்களின் தொல்லை கையெழுத்தால் "தலையெழுத்து' மாறும் அவலம்:நுகர்வோர் அமைப்பு புகார்
வட்டிக்காரர்களின் தொல்லை கையெழுத்தால் "தலையெழுத்து' மாறும் அவலம்:நுகர்வோர் அமைப்பு புகார்
ADDED : ஜூலை 11, 2011 10:42 PM
பந்தலூர் : 'நீலகிரி மாவட்டம் அம்பலமூலா கிராம பகுதிகளில் வட்டிக்காரர்கள் கொடுமை அதிகரித்து வருகிறது,' மாவட்ட எஸ்.பி.,யிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்ட எல்லையில் உள்ள பந்தலூர் அம்பலமூலா பகுதியில் வட்டிக்காரர்களின் அடாவடிகள் நாளுக்கு நாள் மக்களை அச்சுறுத்தி வருகிறது.
ஈரோடு பகுதியை சேர்ந்த ஒரு கும்பல் உள்ளூர் அரசியல்வாதிகள், அடியாட்களை வைத்து கொண்டு, அதிக வட்டிக்கு பணத்தை கொடுத்து வருகிறது. பணத்தை கொடுக்கும் போதே, வெற்று முத்திரை தாள், வெற்று 'பாண்ட்' பத்திரம், ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டிய வெள்ளை பேப்பர்,செக் போன்றவற்றை கையெழுத்துடன் பெறுகின்றனர். பின்பு, கூடுதல் வட்டி கேட்டு முறைகேட்டில் ஈடுபடுகின்றனர். இவ்வாறு அம்பலமூலா புளிப்பள்ளி பகுதியை சேர்ந்த பலரும் வட்டிமேல், வட்டி கட்டி கடும் பாதிப்பில் அவதிப்படுகின்றனர். 'பாதிக்கப்பட்டவர்களின் கணக்கும், வட்டி காரர்களின் கணக்கும் மாறுப்பட்டு இருப்பதாகவும், அது குறித்து கேட்டால், அந்த கும்பல் மிரட்டி வருவதும் தொ டர்கிறது,' என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நரிக்கொல்லி பகுதியை சேர்ந்த சுரேஷ் கூறுகையில்,'' அவசர தேவைக்கு 1 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் பெற்று, கடந்த சில வாரங்களுக்கு முன்னர், 4 லட்சம் ரூபாய் கொடுத்து பத்திரங்களை மீட்டேன். வட்டிக்காரர்களின் தொல்லையால் உடல் நலம் பாதிக்கப்பட்ட கண் பார்வை பறிபோனதுடன், உடலும் செயலிழந்தது. வட்டி கடனை செலுத்த 10 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்ய வேண்டிய தேயிலை தோட்டத்தை 4 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்தேன்,'' என்றார். வட்டி காரர்களின் மிரட்டல் குறித்து பலரும் உள்ளூர் போலீசில் பலமுறை புகார் கூறியும் எவ்வித பயனுமில்லை. மிரட்டல்கள் மட்டுமே அதிகரித்து வருகிறது. இப்பிரச்னை குறித்து பந்தலூர், கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்திற்கு புகார் மனு வந்தது. இதன் பின்பு, சங்க நிர்வாகிகள் விஜயசிங்கம், ராஜன் ஆகியோர் நீலகிரி எஸ்.பி.,டம் மனு கொடுத்துள்ளனர். விரைவில் நடவடிக்கை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.