Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/வடவள்ளி, வீரகேரளம் பேரூராட்சி நான்கு வார்டுகளாக பிரிப்பு

வடவள்ளி, வீரகேரளம் பேரூராட்சி நான்கு வார்டுகளாக பிரிப்பு

வடவள்ளி, வீரகேரளம் பேரூராட்சி நான்கு வார்டுகளாக பிரிப்பு

வடவள்ளி, வீரகேரளம் பேரூராட்சி நான்கு வார்டுகளாக பிரிப்பு

ADDED : ஜூலை 11, 2011 09:54 PM


Google News
பேரூர் : வடவள்ளி, வீரகேரளம் பேரூராட்சி, கோவை மாநகராட் சியில் நான்கு வார்டுகளாக பிரிக்கப்பட்டு, தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

குறிச்சி, குனியமுத்தூர், கவுண்டம்பாளையம் ஆகிய மூன்று நகராட்சி, துடியலூர், வெள்ளக் கிணறு, சின்ன வேடம்பட்டி, சரவணம்பட்டி, காளப்பட்டி, வீரகேரளம், வட வள்ளி ஆகிய ஏழு பேரூராட்சி, விளாங்குறிச்சி ஊராட்சி ஆகிய உள்ளாட்சி அமைப்புகள், கோவை மாநகராட் சியுடன் இணைக்கப்படுகிறது. அந்தந்த உள்ளாட்சி பிரதி நிதிகளிடமிருந்து, தேர்தலுக்கு முன்பாகவே கருத்துக்கேட்பு பெறப் பட்டு, கோவை மாநகராட்சியோடு, தற்போது இணைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், வடவள்ளி பேரூராட்சியில் அவசரக்கூட்டம் நடந்தது. தலைவர் அமிர்த வல்லி தலைமை வகித்தார்;செயல் அலு வலர் சந்திரன் முன்னிலை வகித்தார். வடவள்ளி வடக்கு பகுதியை மாநகராட்சியின் 16வது வார்டாகவும், தெற்கு பகுதியை மாநகராட்சியின் 17வது வார்டாகவும் பிரித்து ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. கடந்த 2001 கணக்கெடுப்பின் படி, தற் போதுள்ள 1, 2, 3, 4, 5, 6, 18 வார்டுகள் 16 வது வார்டிலும் (மொத்தம் 11 ஆயிரத்து 271பேர்), ஏழு முதல் 17 வார்டுகள் வரை, 17வது வார்டிலும் (மொத்தம் 13 ஆயிரத்து 508பேர்), சேர்க்கப்பட்டுள்ளது. இதேபோல், வீரகேரளம் பேரூராட்சியில் நடந்த அவசர கூட்டத்தில், வீரகேரளம் சிறுவாணி ரோட்டுக்கு வடக்கே உள்ள பகுதியை 18வது வார்டாகவும், தெற்கே உள்ள பகுதியை 19வது வார்டாகவும் பிரித்து தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. 2001 கணக்கெடுப்பின் படி, தற் போதுள்ள 1, 2, 3, 4, 13, 14, 15 ஆகிய வார்டுகள் 18வது வார்டி லும் (மொத்தம் 10 ஆயிரத்து 329பேர்), 5 முதல் 12 வரையுள்ள வார்டுகள் 19வது வார்டிலும் (மொத்தம் 9,864 பேர்)சேர்க் கப் பட்டுள்ளன. மொத்தம், 11 உள்ளாட்சி அமைப் புகளை இணைத்து, 40 புதிய வார்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us