ADDED : ஜூலை 11, 2011 09:50 PM
பொள்ளாச்சி : புரவிபாளையம் வழியாக கூடுதல் பஸ் விட வேண்டும் கோரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட
புரவிபாளையம் கிராம மக்கள் வருவாய் கோட்டாட்சியரிடம் கொடுத்த மனு:
புரவிபாளையம் கிராமத்தில் இருந்து தினமும் பள்ளி, கல்லூரிகளுக்கு
மாணவர்களும், வெளியூர்களுக்கு வேலைக்கு தொழிலாளர்களும் செல்கின்றனர். காலை
நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அரசு பஸ்சை நம்பியுள்ளனர்.
புரவிபாளையம் வழித்தடத்தில் காலை நேரத்தில் கூடுதலாக ஒரு பஸ் அல்லது ஜமீன்
காளியாபுரம் செல்லும் அரசு பஸ்சை புரவிபாளையம் பிரிவு வழியாக இயக்க
வேண்டும். கோவை - நாகூர் வரும் பஸ்சில் தொழிலாளர்கள் வெளியூர்களுக்கு
வேலைக்கு செல்கின்றனர். இந்த பஸ் காலை நேரத்தில் மட்டும் புரவிபாளையம்
வருகிறது. மாலை நேரத்திலும் இந்த வழித்தடத்தில் பஸ் இயக்கினால் வெளியூரில்
வேலை முடிந்து திரும்பி வரும் மக்களுக்கு வசதியாக இருக்கும். இவ்வாறு,
மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.